“Love Oh Love” — பவீஷ் நடிப்பில், மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் உருவாகும் கலகலப்பான ரொமான்டிக் காதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!
ஷினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின்மென்ட் லிமிடெட் — தினேஷ் ராஜ் வழங்க, கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் (இணைத் தயாரிப்பாளர் G. தனஞ்ஜெயன்) இணைந்து தயாரிக்கும் படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை Production No.1 என அழைக்கப்பட்ட இந்தத் திரைப்படம் இப்போது “Love Oh Love” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்றைய காதலின் இனிமை, குழப்பம் மற்றும் உணர்வுகளை கொண்டாடும் புதிய வகை காதல் பொழுதுபோக்குப் படமாக உருவாகிறது.
கடந்த அக்டோபரில் புகழ்பெற்ற இயக்குனர் கஸ்தூரி ராஜாவால் துவக்க விழா நடைபெற்றதையடுத்து, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அழகிய இடங்களில் வேகமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. முதல் கட்டப் படப்பிடிப்பு பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்டத்துக்கான தயாரிப்புகள் உற்சாகமாக நடைபெற்று வருகின்றன.
இளம் அணியினரின் புதிய மேஜிக்:
இந்த படத்தில் பவீஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் (NEEK) திரைப்படத்தில் சிறந்த நடிப்பால் கவனம் பெற்ற பவீஷ், இந்த ரொமாண்டிக் காதல் கதைக்குத் தகுந்த தேர்வாக இருக்கிறார்.
நாக துர்கா, தெலுங்கு யூட்யூப் உலகில் பிரபலமானவர், இந்தப் படத்தின் மூலம் தமிழ்த் திரைத்துறைக்கு அறிமுகமாகிறார். அவரின் உற்சாகமான நடிப்பும், பவீஷ்க்கும் அவருக்கும் உடனான chemistry, Love Oh Love படத்தின் முக்கிய சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன், (இயக்குனர் லக்ஷ்மனின் (போகன், பூமி) உதவி இயக்குனரான இவர்) எழுதி இயக்கும் இந்தப் படம் நகைச்சுவை, எமோஷனல் மற்றும் புதுமையான கதை சொல்லலின் கலவையுடன் கலந்த மனதை வருடும் காதல் பயணமாக அமையும்.
தொழில்நுட்பக் குழு:
ஒளிப்பதிவு: பி. ஜி. முதையா
படதொகுப்பு: தேசிய விருது பெற்ற என். பி. ஸ்ரீகாந்த் (ஆரண்ய காண்டம், மத கஜா ராஜா, விடா முயர்ச்சி)
கலை இயக்கம்: மகேந்திரன்
ஆடை வடிவமைப்பு: ஹர்ஷிகா
அட்வென்சர் காட்சிகள் (ஆக்ஷன்): அபிஷேக்
இசை — இப்படத்தின் முக்கிய வலிமைகளில் ஒன்று — திங்க் மியூசிக் வழிகாட்டுதலின் கீழ் இன்றைய தலைமுறையைச் சார்ந்த புதிய இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
பாடல்கள் மற்றும் பின்னணி இசை இளைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் ஈர்க்கும் வகையில் இருக்கும்.
Post-production பணிகள் இயக்குனர் விஜய்யின் D Studios Post நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகின்றன.