இசையமைப்பாளர் ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளரும், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான எம்.சி. சபேசன் (சபேஷ்) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று மதியம் 12.15 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 68.
சகோதரர் முரளி உடன் இணைந்து சபேஷ்-முரளி என்ற பெயரில் திரைப்படங்களுக்கு சபேஷ் இசையமைத்து வந்தார். சபேஷுக்கு கீதா மற்றும் அர்ச்சனா எனும் மகள்களும் கார்த்திக் எனும் மகனும் உள்ளனர். சபேஷின் மனைவி தாரா முன்னரே காலமானது குறிப்பிடத்தக்கது.
சபேஷின் இறுதி சடங்குகள் அவரது இல்லமான எண், 151, 18வது தெரு, சவுத்ரி நகர், வளசரவாக்கம், சென்னை என்ற முகவரியில் நாளை (அக்டோபர் 24) மாலை 3 மணிக்கு நடைபெற்று, பின்னர் அவரது உடல் பிருந்தாவனம் நகர் இடுகாட்டிற்கு எடுத்து செல்லப்படும்.