சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது

16

ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், கும்கி அஸ்வின் முக்கிய வேடங்களில் நடித்துள்ள ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன

‘காதல் மட்டும் வேணா’ திரைப்படத்தை இயக்கி நடித்த சமீர் அலி கானின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படத்தை தயாரித்து இயக்குவதோடு சமீர் அலி கான் நாயகனாகவும் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் தயாரிக்கப்படும் கலகலப்பான காதல் கதையான ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதை அறிவிக்கும் விதமாக படத்தின் இரண்டாம் பார்வையை (செகண்ட் லுக் போஸ்டர்) படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் கதையை பிரதிபலிக்கும் வகையிலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் வகையிலும் ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ செகண்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக மிகவும் ஸ்டைலான முறையில் இப்படத்தை வடிவமைத்திருப்பதாக சமீர் அலி கான் தெரிவித்தார்.

“ஒரே திரைப்படம் பல மொழிகளில் வெளியாகும் இன்றைய காலகட்டத்தில் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்தை தமிழில் மட்டுமே உருவாக்கியுள்ளோம்,” என்று சமீர் அலி கான் தெரிவித்தார்.

இப்படத்தில் ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, அலி, சோனியா போஸ், மாலா பார்வதி, தீபிகா அமின், உதயதீப், கும்கி அஸ்வின் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

திரைப்படம் குறித்த மேலும் தகவல்களை பகிர்ந்த சமீர் அலி கான், “இரண்டு வெவ்வேறு பின்னணிகளை கொண்ட நாயகனும் நாயகியும் காதலில் விழுகின்றனர். இவர்கள் காதலுக்கு எத்தகைய இடையூறுகள் எழுகின்றன அத்தனை தடைகளையும் வெற்றிகரமாக கடந்து எவ்வாறு இணைகின்றனர் என்பதை மிகவும் கலகலப்பான முறையில் கூறியிருக்கிறோம்,” என்று கூறினார்.

‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கோயம்புத்தூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. இத்திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.