சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் – கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது.
தமிழ் திரையுலகில் பல புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR ன் நடிப்பில் தயாராகி வரும் ‘அரசன்’ படத்தின் ஐந்து நிமிட ப்ரமோ வீடியோ நேற்று மாலை திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற நிலையில் .. பாதுகாப்பு காரணங்களுக்காக ரசிகர்களுடன் இணைந்து ப்ரோமோ வீடியோவை காண இயலாத நிலை குறித்து வருத்தம் தெரிவித்து காணொலி ஒன்றையும் அவர் வெளியிட்டார். இதுவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் தங்களுக்கு கிடைத்த தீபாவளி பரிசு என இந்த ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோவை கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் சிலம்பரசன் TR – வெற்றிமாறன் -கலைப்புலி எஸ் தாணு- கூட்டணியில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று காலை பத்து மணி அளவில் இணையத்தில் வெளியானது. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் பார்வையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் வெற்றிமாறனுடன் முதன்முறையாக சிலம்பரசன் TR – இணைந்திருப்பதால், ‘அரசன்’ படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலகத்தினரிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. வடசென்னை பின்னணியில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தில் இடம் பெறும் காட்சிகளும், வசனங்களும் வெற்றிமாறன் – சிலம்பரசன் TR கூட்டணியின் பிரம்மாண்ட வெற்றியை உறுதிப்படுத்துகிறது. அத்துடன் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்திருக்கிறது.
தமிழில் ‘அரசன்’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘சாம்ராஜ்யம்’ என்ற பெயரிலும் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.
இதனிடையே தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் ஏழை எளிய மக்களுக்கு பசியை போக்குவதற்கான அன்னதானத்தை வழங்க வேண்டும் என அவருடைய ரசிகர்களுக்கு சிலம்பரசன் TR விடுத்திருக்கும் வேண்டுகோள் கவனம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.