பார்வதா என்டர்டெய்ன்மென்ட் – கென் கருணாஸ் இணையும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது

15

பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்து, இயக்கும் புதிய திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொலியாக வெளியிடப்பட்டிருக்கிறது.

‘அசுரன்’ ‘வாத்தி’ ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகர் கென் கருணாஸ் தன் திறமைகளை வளர்த்துக் கொண்டு புதிய படத்தில் கதையின் நாயகனாக நடித்து இயக்குகிறார். இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கருப்பையா C ராம் தயாரித்திருக்கிறார்.

பார்வதா என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக இந்த திரைப்படம் உருவாகிறது‌. இது ஒரு ஜாலியான பள்ளிக்கூடம் பின்னணியின் உருவாகிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கென் கருணாஸ் இணைந்திருப்பது ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே தயாரிப்பாளர் கருப்பையா C ராம் ஏற்கனவே இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடித்த சண்முகம் சலூன் என்ற குறும்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.