கதைகள் எப்போதும் பார்வையாளர்களை மகிழ்விக்கும், சில்லிட வைக்கும், எண்டர்டெயின் செய்யும்…அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு ஒரிஜினல் கதைகளை அறிவித்துள்ளது நெட்ஃபிலிக்ஸ்!

8

அக்டோபர் 13, 2025: நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் 2014 ஆம் ஆண்டில் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றது. அதேபோல, நடிகர் துல்கர் சல்மானின் ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படமும் இந்தியாவின் டாப் 10 படங்கள் பட்டியலில் 14 வாரங்கள் இடம் பெற்றிருந்தது. மேலும், தென்னிந்திய படங்களான ‘புஷ்பா2’, ‘அமரன்’, ‘லியோ’ மற்றும் ‘தேவரா’ போன்ற படங்களும் ஆங்கிலம் அல்லாத டாப் 10 படங்களில் உலகளவில் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு பிராந்தியத்தில் இருந்தும் ஒரிஜினல் கதைகளுக்கு எந்தளவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது என்பதை இது காட்டுகிறது. நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ‘டெஸ்ட்’, ‘தி கேம்: யு நெவர் பிளே அலோன்’ ஆகிய ஒரிஜினல் வெளியீடுகளைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஆறு புதிய படங்கள் மற்றும் சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்தியாவின் பாரம்பரியத்தை கதைகள் மூலம் உலகளவில் எடுத்து செல்ல இந்த முறை நெட்ஃபிலிக்ஸ் புதிய திறமையாளர்களுடன் கைக்கோத்துள்ளது.

நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் வைஸ் பிரெசிடெண்ட், மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, “மொழி, கலாச்சாரம் மற்றும் பல மாநிலங்களை கடந்து தென்னிந்தியாவின் கதைகளை உலகம் முழுதும் எடுத்து செல்ல மிகவும் ஆர்வமுடன் இருக்கிறோம். எங்களது முந்தைய ஒரிஜினல் வெப் சீரிஸ் மற்றும் படங்களின் வெளியீடு ரசிகர்கள் மத்தியில் பெற்ற வரவேற்பு நெட்ஃபிலிக்ஸ் வளர்ச்சிக்கும் பெரிதளவு உதவியது. அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கில் த்ரில்லர், நகைச்சுவை, கிராஸ்- கல்ச்சர் ரொமான்ஸ் போன்ற ஜானர்களில் ஆழமாக கதை சொல்லும் புது திறமையாளர்களுடன் இணைந்துள்ளோம். இந்தக் கதைகளை பார்வையாளர்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறோம்” என்றார்.

சீட் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் தமிழ் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமான ‘ஸ்டீபன்’ படத்தை முதலில் அறிமுகப்படுத்துகிறோம். மிதுன் இயக்கும் இந்தப் படத்தில் கோமதி ஷங்கர் நடிக்கிறார். ஒரு கேஸில் கில்லரை மதிப்பிடும் மனநல மருத்துவரை சுற்றி இந்தக் கதை நகரும். இது எப்படி அந்த மனநல மருத்துவருக்கே எதிராக திரும்பும் என்பதையும் இந்தக் கதை சொல்லும்.

அடுத்து, தெலுங்கு சீரிஸ் ‘சூப்பர் சுப்பு’. நகைச்சுவை ததும்ப உருவாகும் வித்தியாசமான இந்தக் கதையை மாலிக் ராம் இயக்க சந்தீப் கிஷன் நடித்துள்ளார். வேலைக்குத் தகுதியற்றவராக இருந்தாலும், ஒரு தொலைதூர கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு பாலியல் கல்வியைக் கற்பிக்கும் பணியில் எதிர்பாராத விதமாக நேரும் அனுபவங்களே கதை.

பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில், நவீன காதல் குறித்த வித்தியாசமான கோணத்தை வழங்குகிறது ‘காதல்’ என்ற தமிழ் சீரிஸ். எதிர்பாராத வழிகளில் இருவரை நெருக்கமாகக் கொண்டுவரும் தருணத்தில் ஏற்படும் சவால்களை இந்தத் தொடர் பேசுகிறது. நகைச்சுவை மற்றும் இன்றைய காதலையும் தொடர் பேச இருக்கிறது.

தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய கலாச்சாரக் கதையைக் கொண்டு வருகிறது ‘மேட் இன் கொரியா’. ரா கார்த்திக் இயக்கிய இந்தக் கதையில் ‘ஸ்க்விட் கேம்’ புகழ் பார்க் ஹை-ஜினுடன் பிரியங்கா மோகன் நடிக்கிறார். துரோகத்தால் கொரியாவுக்கான கனவுப் பயணம் தடம் புரண்ட ஒரு இளம் பெண்ணைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது. எதிர்பாராத நட்புகள் மற்றும் கடினமான பாடங்கள் மூலம், அவள் நம்பிக்கையையும் தன்னையும் கண்டுபிடிக்கிறாள்.

வினோத் அனந்தோஜு இயக்கத்தில் உருவாகியுள்ள தெலுங்கு நாட்டுப்புற த்ரில்லர் கதைதான் ‘தக்‌ஷகுடு’. ஆனந்த் தேவரகொண்டா ஒரு பார்வை சவால் கொண்டவராக நடித்திருக்க அவருடன் விசுவாசமான ஒரு நாயும் எப்போதும் இருக்கிறது. ஒரு துயரமான விபத்துக்குப் பிறகு தனது சக கிராமவாசிகளின் மரணத்திற்குப் பழிவாங்கப் புறப்படுகிறார் என்பதுதான் கதை.

இயக்குநர் சாருகேஷ் சேகரின் தமிழ்த் தொடர் ‘லெகஸி’. இதில் ஆர். மாதவன், நிமிஷா சஜயன், கௌதம் கார்த்திக், குல்ஷன் தேவையா மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த குடும்ப கேங்ஸ்டர் நாடகம் வாரிசு உரிமையை மையமாகக் கொண்டு நகர்கிறது.

த்ரில்லர்ஸ், நெகிழ்ச்சியான கதைகள் முதல் அதிரடியான நகைச்சுவைகள் மற்றும் மென்மையான காதல் வரை இந்த மாறுபட்ட ஜானர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் படைப்புத் திறமையைக் காட்டுகிறது. மேலும், நெட்ஃபிலிக்ஸின் பன்முகத்தன்மைக்கான அர்ப்பணிப்பையும் இது காட்டுகிறது.

‘பிளாக் வாரண்ட்’, ‘தூம் தாம்’, ‘டப்பா கார்டெல்’, ‘ஜூவல் தீஃப்’, ‘டெஸ்ட்’, ‘தி ராயல்ஸ்’, ‘தி கிரேட் இந்தியன் கபில் ஷோ’ மற்றும் சமீபத்திய வெளியீடான ‘தி பேடாஸ் ஆஃப் பாலிவுட்’ என தைரியமான மற்றும் வித்தியாசமான கதை சொல்லலுக்கு புகழ்பெற்ற நெட்ஃபிலிக்ஸ் தற்போது தென்னிந்தியாவின் புது திறமையாளர்களுடன் இணைந்துள்ளது.

இந்த வித்தியாசமான கதைகளை நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் மட்டும் கண்டு மகிழுங்கள்!

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:

நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.