திவ்ய சேத்ரா பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நிர்மலா ராஜன் வழங்க C.R.ராஜன் தயாரிக்கும் படத்திற்கு ” அமரன் “என்று பெயரிட்டுள்ளனர்.
ராஜன் தேஜேஸ்வர் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.கதாநாயகியாக ஐரா அகர்வால் நடித்துள்ளார். மற்றும் ஜார்ஜ், சாய் தீனா, நாகிநீடு, கல்கி ராஜன், ஹரிஷ் பெராடி, வாசுதேவன் முரளி ஆகியோர் நடித்துள்ளனர்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் திருஅருள் கிருஷ்ணன். இவர் இயக்குனர் கோகுல், ராஜன் மாதவ் ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படம் பற்றி இயக்குனர் திருஅருள் கிருஷ்ணன் பகிர்ந்தவை.
இப்படம் மூன்று காலகட்டங்களில் மூன்று நிலப்பகுதிகளில் நடக்கும் ஒரு அமர காதல் கதை.
இதுவரை திரையில் பார்த்திராத அதிரடி காட்சிகளுடன் முழுக்க முழுக்க ஆக்சன் விருந்தாக இந்த திரைப்படம் இருக்கும். மிராக்கிள் மைக்கேல் புதுவிதமான பாணியில் ஸ்டண்டை வடிவமைத்துள்ளார்.
கிளைமேக்ஸ் காட்சியில் பிரபல பாலிவுட் குழு உதவியுடன், முழுக்க ரியல் ஸ்டண்ட்ஸ் செய்திருக்கிறோம். தெலுங்கு சூப்பர் ஹிட் இசையமைப்பாளர் மிக்கி J மேயர் இப்படம் மூலம், தமிழுக்கு முதன்முறையாக அறிமுகமாகிறார். 4 பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக இருக்கும். 5000 அடி உயரத்தில் ஒரு காட்சியை படமாக்கியுள்ளோம். இப்படி இப்படத்திற்காக ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து வடிவமைத்திருக்கிறோம். இப்படம் இதுவரை சொல்லப்படாத கிழக்கு காடு மக்களின் வாழ்க்கையை சொல்லும் படமாக இருக்கும். இப்படம் ரசிகர்களுக்கு முற்றிலும் புது அனுபவமாக இருக்கும்.
பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் மிக்கி ஜெ .மேயர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
வெற்றிமாறனின் வட சென்னை, அசுரன் படங்களில் பணியாற்றிய R. ஸ்ரீராமர் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்.
இந்தப் படத்தின் முதல் பார்வையை இயக்குனரும், நடிகருமான சசிகுமார் நேற்று தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார். தற்போது அது ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு, பகிரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொழில் நுட்ப குழு விபரம் :
எழுத்து இயக்கம் – அருள் கிருஷ்ணன்
இசை – மிக்கி ஜெ .மேயர்
பாடல்கள் – சினேகன், சௌந்தரராஜன். K
ஒளிப்பதிவு – பரத் குமார், கோபிநாத்
எடிட்டிங் – R. ஸ்ரீராமர்
கலை இயக்கம் – ஜனார்த்தனன்
ஸ்டண்ட் – மிராக்கிள் மைக்கேல்
நடனம் – பூபதி
தயாரிப்பு மேற்பார்வை – A.P.ரவி
மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்
தயாரிப்பு – C.R.ராஜன்.