குத்துச்சண்டை விளையாட்டில் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழாவும், இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் பொருளாலராக தேர்வு பெற்றுள்ள தமிழக குத்துச்சண்டை சங்கத் தலைவர் பொன். பாஸ்கரனுக்கு பாராட்டு விழாவும் சென்னையில் இன்று தமிழ்நாடு மாநில குத்து சண்டை சங்கத்தின் சார்பில் நடைபெற்றது.
4வது சப் ஜூனியர் தேசிய குத்துச்சண்டை போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சந்தோஷ் (35 கிலோ) ஓப்ரைட் மெக்காட்ஸ் (37 கிலோ), மோனிக்ஷா (70 பிளஸ் கிலோ) ஆகியோருக்கு இவ்விழாவில் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இது தவிர விழாவில் கௌரவிக்கப்பட்ட வீரர் வீராங்கனைகள் விவரம் வருமாறு: 3வது சப் ஜூனியர் தேசிய போட்டி 2024: சுஜித் (37 கிலோ) வெள்ளி.
4வது சப் ஜூனியர் தேசிய போட்டி 2025: வெள்ளி பதக்கம் வென்றவர்கள்: தர்ஷன் (46 கிலோ), காவியா (35 கிலோ), சாரா தமிழ் (40 கிலோ), சுவாதிக்கா (61 கிலோ), பானு ஸ்ரீமதி (70 பிளஸ் கிலோ) ஆகியோரும், கேலோ இந்தியா யூத் தேசிய விளையாட்டு போட்டி 2025ல் வெள்ளி வென்ற பிரதிக்ஷாவும் (80 பிளஸ் கிலோ) கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய அளவிலான போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்றவர்கள் விவரம்:
3வது சப் ஜூனியர் தேசியப் போட்டி 2024: லாவண்யா (33), கனிஷ்கா (45), நிஷாலினி (49), துருவன் (43), உசைன் ஷாஹித் சையத் (67).
6வது தேசிய ஜூனியர் குத்துச்சண்டை போட்டி 2025:
சுனில் (63), பிராங்கிளின் (80), மகாலட்சுமி (48), ஸ்ரீநிதி (70), பார்கவி (75), சார்மி (80 பிளஸ).
4வது சப்ஜூனியர் தேசிய குத்துச்சண்டை போட்டி 2025: ஹர்ஷிதா (52), ஹேமாவதி (64), விக்னேஸ்வரர் (52), சக்தி (55).
7வது யூத் தேசிய குத்துச்சண்டை போட்டி 2025:
ஹரிஷா (65), பிரதிக்ஷா (80 பிளஸ்).
8வது எலைட் பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டி 2025: கலைவாணி(வெண்கலம்).
கேலோ இந்தியா யூத் நேஷனல் கேம்ஸ் கேம்ஸ் 2025:
கீர்த்திவர்ஷன் (47 – 50), குணஸ்ரீ (48-51).
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லக்னோவில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவரும், கடந்த ஜூலை மாதம் அமெரிக்காவில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்ற உலக போலீஸ் மற்றும் தீயணைப்பு துறை விளையாட்டுப் போட்டியில் குத்துச்சண்டையில் தங்கம் வென்று சாதனை படைத்தவருமான பி. ஹரிகிருஷ்ணன் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டார். இவர் சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.
தமிழ்நாடு குத்துச்சண்டை சங்க தலைவராக பொறுப்பு வகித்து வரும் பொன். பாஸ்கரன், சமீபத்தில் நடைபெற்ற இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் பொருளாலராக தேர்வு பெற்றுள்ளார். இவருக்கு தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் வீரர் வீராங்கனைகள் வாழ்த்து தெரிவித்தனர்.
……….
Photo caption:
இந்த ஆண்டில் 2025 நடைபெற்ற 4வது சப் ஜூனியர் குத்துச்சண்டை போட்டி, 6வது தேசிய ஜூனியர் குத்துச்சண்டை போட்டி, கேலோ இந்தியா மற்றும் யூத் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன பொருளாளரும், தமிழ்நாடு மாநில குத்துச்சண்டை சங்க தலைவருமான பொன். பாஸ்கரன் பங்கேற்று வீரர், வீராங்கனைகளை பாராட்டி பரிசுகள் வழங்கினார். விழாவில் தமிழ்நாடு மாநில குத்துச் சண்டை சங்க பொதுச் செயலாளர் இப்ராஹிம், செயலாளர் எம் எஸ் நாகராஜன், பொருளாளர் பிரபு, இணைச் செயலாளரும் ஒலிம்பியமான வி. தேவராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.