சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா, மக்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆக்ஷன்-த்ரில்லர் படமான “சிசு: ரோட் டு ரிவெஞ்ச்” திரைப்படத்தின் தமிழ் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கலக்கிய SISU படத்தின் தொடர்ச்சியாக உருவாகியுள்ள இந்த படம், தத்ரூபமான சினிமா ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த திரைப்படம் இந்திய திரையரங்குகளில் நவம்பர் 21, 2025 அன்று ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.
கதை சுருக்கம் : போரின்போது தனது குடும்பம் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட பின் வீடு திரும்பும் “மரணத்தை ஏற்க மறுக்கும் மனிதன்” (ஜோர்மா டோமிலா), அந்த வீட்டை இடித்து ஒரு லாரியில் ஏற்றி, தனது குடும்பத்தின் நினைவாக பாதுகாப்பான இடத்தில் அதை மீண்டும் அமைக்கத் தீர்மானிக்கிறார். ஆனால், அவரது குடும்பத்தை கொன்ற சிவப்பு படை தளபதி (ஸ்டீபன் லாங் – Don’t Breathe புகழ்) மீண்டும் வந்து பழிவாங்க முயல்கிறார். இப்போது தொடங்குகிறது, உயிர்க்கும் மரணத்துக்கும் இடையிலான பரபரப்பான, அதிரடி நிறைந்த, நம்பமுடியாத சண்டைக் காட்சிகளால் நிரம்பிய சாகசப் பயணம்.
இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஜல்மாரி ஹீலாண்டர். தயாரிப்பாளர்கள் மைக் குட்ரிட்ஜ் மற்றும் பெட்ரி ஜோகிரண்டா. இப்படத்தில் ஜோர்மா டோமிலா, ரிச்சர்ட் பிரேக், ஸ்டீபன் லாங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் இந்தியா இந்த படத்தை இந்திய திரையரங்குகளில் 21 நவம்பர் 2025 அன்று பிரத்யேகமாக வெளியிட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.