“தி பாரடைஸ்” படத்திலிருந்து நேச்சுரல் ஸ்டார் நானியின் ஜடால் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

31

‘தி பாரடைஸ்’ படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி கதாப்பாத்திரத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும்  வரவேற்பைப் பெற்று வருகிறது. நானி வித்தியாசமான  தோற்றத்தில், இதுவரை தோன்றாத மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன், இரண்டு ஜடை முடிகள் தொங்க அவரின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜடால்’ – தனித்துவமான தோற்றம் கொண்ட ஒரு தனித்துவமான பெயராக அமைந்துள்ளது. இந்த தோற்றத்தை அறிமுகப்படுத்தி, தயாரிப்பாளர்கள் ‘மாறுபட்ட சிகையலங்காரமாகத் துவங்கி ஒரு புரட்சிகரமான லுக்காக முடிந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர்.

தசரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு திறமை மிகு  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியிருக்கும் #TheParadise, இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ‘ரா ஸ்டேட்மென்ட்’ க்ளிம்ப்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நானியின் ஃபர்ஸ்ட் லுக் மூலம், தயாரிப்பாளர்கள் எதிர்பார்ப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். இயக்குநர் ஸ்ரீகாந்த் தனது தொலைநோக்குப் பார்வை மற்றும் நுணுக்கமான விவரங்களைப் படைப்புகளில் வெளிப்படுத்துவதன் மூலம்   தேசத்தின் பேசு பொருளாக மாறியிருக்கிறார். இந்த போஸ்டர் படத்தின் மீதான  எதிர்பார்ப்பைப் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

தசரா படத்திற்குப் பிறகு அவர்களின் இரண்டாவது கூட்டணியில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா, யாருமே நினைத்துப் பார்க்காத வகையில் நானியை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இந்தக் கதை ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத்தின் உட்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளது மற்றும் ஒரு தீவிரமான காலகட்ட அதிரடி நாடகமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறது. இந்தப் படத்தை SLV சினிமாஸின் கீழ் சுதாகர் செருகுரி பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளார்.

ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்தில் ராகவ் ஜுயல் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒளிப்பதிவை சிஹெச் சாய் கையாள, நவீன் நூலி மற்றும் அவினாஷ் கொல்லா முறையே எடிட்டிங் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பைக் கையாளுகின்றனர்.

தி பாரடைஸ் திரைப்படம் மார்ச் 26, 2026 அன்று திரைக்கு வர உள்ளது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் ஆகிய எட்டு மொழிகளில் வெளியாகி, இந்திய சினிமாவின் சிறப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகி, இந்திய சினிமாவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்யும் என்று படக் குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.