இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது!

35

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் இருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து மியூசிக்கல் காமெடியாக உருவான இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 4 அன்று வெளியானது.

மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்திருக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘பறந்து போ’ படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.எஸ். மதி படத்தொகுப்பு செய்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி கவனித்தார்.