விவசாயத்தின் பின்னணி கொண்ட கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள படம் ‘உழவர் மகன்’.

18

இப்படத்தை ப. ஐயப்பன் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது மூன்றாவது படம்.ஏற்கெனவே இவர் ‘தோனி கபடி குழு’ ‘கட்சிக்காரன் ‘ ஆகிய படங்களை இயக்கியவர் .அந்த படங்களைப் போலவே இதிலும் ஒரு சமூகக் கருத்தை மக்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்.

இந்த ‘உழவர் மகன்’ படத்தை சுபலட்சுமி ஃபிலிம்ஸ் சார்பாக கே. முருகன் தயாரித்துள்ளார். இணைத்தயாரிப்பு நா. ராசா.

இப்படத்தில் இன்று அதிகார வர்க்கத்தால் புறக்கணிக்கப்பட்டு இந்த அமைப்பின் மூலம் கைவிடப்பட்ட நிலையில் இருப்பது விவசாயம்.தொழில் உத்திரவாதம் இல்லாத விவசாயத்தில் ஈடுபட்டு விவசாயிகள் நாளும் துயரங்களையும் துன்பங்களையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.விவசாயிகளின் சிக்கல்களைப் பற்றிப் பேசுகிறத இந்தப் படம். நாள்தோறும் இந்தத் தொழில் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. விவசாய நிலங்கள் களவாடப்படுகின்றன. வெவ்வேறு தொழில்களுக்கு இரையாக்கப்படுகின்றன.

உயிர்த்தொழிலான பயிர்த் தொழிலை மீட்க செய்ய என்ன செய்ய வேண்டும்? அது வளர்வதற்கும் மறுமலர்ச்சி காண்பதற்கும் தடைகளாக இருப்பவை எவை போன்றவற்றைப் பற்றியெல்லாம் இந்தப் படம் பேசுகிறது.விவசாய மண், தொழில் சார்ந்த பிரச்சினைகளைப் பற்றிப் பேசும் இந்தக் கதைக்குள் ஒரு காதல் கதையும் உள்ளது. அதனுடன் இணைந்து ஒரு சமூகக் கருத்தை வெளிப்படுத்தி திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

இப்படத்தில் கதையின் நாயகனாக கௌஷிக் நடித்துள்ளார். நாயகிகளாக சிம்ரன் ராஜ் மற்றும் வின்சிட்டா ஜார்ஜ் இருவரும் நடித்துள்ளனர்.
மிரட்டும் வில்லனாக கட்சிக்காரன் படத்தில் நடித்த விஜித் சரவணன் நடித்துள்ளார் .
யோகிராம், ரஞ்சன் குமார், சிவசேனாதிபதி, குமர வடிவேல் ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர்

இந்தப் படம் விருத்தாசலம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாய பூமியை மையம் கொண்டு படப்பிடிப்பு நடத்தி 40 நாட்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியிடுவதற்குத் தயாராக இருக்கிறது .ஆகஸ்ட் 8ஆம் தேதி திரையரங்க வெளியீட்டுக்கான முன்னெடுப்புப் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன தமிழகம் எங்கும் ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் சார்பில் ஜெனீஷ் வெளியீடு…