பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக செக்யூர் கேம் இந்தியா நிறுவனம் வழங்கிய இலவச cctv கேமராக்களை மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர் .மகாதேவன் திறந்துவைத்தார் .
“செக்யூர்கேம் இந்தியா” நிறுவனம் மேற்கொண்ட ‘நமது நகரத்தை பாதுகாப்போம்’ [SECURE OUR CITY] திட்டத்தின் கீழ் சென்னை நகரம் முழுவதும் 10000 CCTV கேமராக்களை பொறுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக,”சென்னை பட்டினப்பாக்கம் (சீனிவாசபுரம்) பகுதியில் சமூக பாதுகாப்பை மேம்படுத்தவும், குற்றங்களை தடுப்பதற்கும்,மக்களின் மனநிம்மதியை உறுதிப்படுத்துவதற்குமான இலக்கில், சீனிவாசபுத்தில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, “செக்யூர் கேம் இந்தியா” நிறுவனம் முற்றிலும் இலவசமாக சிசிடிவி கேமராக்களை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சார பயணத்தின் முதல் இலவச CCTV கேமராக்கள் நிறுவும் பணியின் வெற்றிகரமான நிறைவு, மற்றும் “பாதுகாப்பு தொடக்க விழா” இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாண்புமிகு உச்சநீதி மன்ற நீதிபதி திரு.ஆர் .மகாதேவன் அவர்கள் கலந்து கொண்டு செக்யூர் அவர் சிட்டி விழிப்புணர்வு பிரசார பயணத்தின் தொடர் வெள்ளி கோப்பையை வளரும் இளம் தலைமுறை மாணவர்களின் கைகளில் வழங்கி ,சீனிவாசபுரம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள cctv கேமராக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகரும், முன்னாள் மேற்கு வங்க கவர்னருமான திரு எம்.கே. நாராயணன் அவர்கள் , மற்றும் உயர் காவல்துறை அதிகாரிகள் என பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள். இந்நிகழிச்சியில் சீனிவாசபுரம் பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பெண்கள் மாற்று குழந்தைகளின் பாதுகாப்பில் cctv கேமராக்களின் பங்களிப்பை பற்றி செக்யூர் கேம் இந்தியா நிறுவனர் ரிஜோய் தாமஸ் உரையாற்றினார் .