பாரம்பரியமிக்க பண்பட்ட நடிகை, கன்னி தமிழ்நாட்டிலே கன்னடத்துப் பைங்கிளி என பட்டப் பெயர் எடுத்து, பட்டை தீட்டப்பட்ட வைரமாக ஜொலித்தவர் பழம்பெரும் நடிகை பி.சரோஜாதேவி. இவர் சரித்திரத்தில் இடம் பிடித்த சாதனை தேவி ஆவார். மறைந்து விட்ட மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ‘காதல் மன்னன்’ ஜெமினி கணேசன் போன்ற நாயகர்களோடு நடித்தவர். பல்வேறு மொழிகளில் வேறு பண்பட்ட நாயகர்களுடன் நடித்து, ‘நவரச நாயகி’ என்ற முத்திரை பதித்தவர். இவருடைய மறைவு செய்தி திரை உலகிற்கே ஒரு அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் ரசிகப் பெருமக்களுக்கும், அவருடைய இல்லத்தார்களுக்கும் என்னுடைய ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது கலைத்தொண்டிற்கு என்றும் இருக்கிறது ஒரு தனி மரியாதை. அதனால் தான் கர்நாடக அரசு அவரது உடலை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என்று அறிவித்திருக்கிறது. கர்நாடக அரசுக்கு தமிழ் திரை உலகின் சார்பாக, எனது மனமார்ந்த நன்றிகள். அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்.