‘மனசி’ – உளவியல் சமூக மறுவாழ்வு திட்டத்தின் மூலம் பெண்கள் அதிகாரமடைவதற்கான ஒரு திட்டம்!
சென்னை, ரெஹபோத் புகலிட இல்லத்தில் தொடங்கப்பட்டது
சோமங்கலம் கிராமம், காஞ்சிபுரம் | ஜூலை 8, 2025: பெண்கள் திறனதிகாரம் பெறுதல் மற்றும் சமூகத்தோடு மறு ஒருங்கிணைப்பு என்ற குறிக்கோள் இலக்கை நோக்கிய ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாக, காரிட்டாஸ் இந்தியா மற்றும் ரூப் வி. கே. ஜெயின் அறக்கட்டளை (ஹைவே ரூப் பிரிசிஷியன் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூக பொறுப்பு பிரிவு) ஆகியவற்றுடன் இணைந்து ‘மனசி’ திட்டத்தை ரெஹபோத் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட், தொடங்கியிருக்கிறது. இது, மனநிலை சார்ந்த சவால்களை எதிர்கொள்ளும் பெண்களுக்காக சென்னையில் ரெஹபோத் புகலிட இல்லத்தில் தங்கியிருக்கும் பெண்களின் உளவியல் சமூக மறுவாழ்வை மையமாகக் கொண்ட சமூக அடிப்படையிலான ஒரு முயற்சி இது.
இத்திட்ட தொடக்க நிகழ்வில் முக்கிய விருந்தினர்களான ஹைவே ரூப் நிறுவனத் தலைவர் திரு மொஹித் ஆஸ்வால், தலைமை நிர்வாக அதிகாரி திரு தர்மேஷ் அரோரா, தொழிலக தலைவர் திரு M G V விஜயேந்திரா, காரிட்டாஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அருட்திரு. R. ஜேசுதாஸ் மற்றும் ரெஹபோத் டிரஸ்ட் இயக்குனர் மிஸ். சோரைடா சாமுவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் தேசிய மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு நிறுவன (NIEPMD) இயக்குனர் டாக்டர் A. அமர்நாத் மற்றும் மாவட்ட அளவிலான இந்த நிறுவனத்தின் மூத்த அலுவலர்களும் பங்கேற்றதன் மூலம் இந்த தாக்கம் மிகுந்த முயற்சியின் கூட்டுச் செயல்திறனை வலியுறுத்தியது.
நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக, ரூப் வி. கே. ஜெயின் அறக்கட்டளை, மருத்துவ உதவிகள் மற்றும் சுகாதார சேவைகள் மூலம் ரெஹபோத் இல்லத்தில் உள்ள பெண்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகிறது. ‘மனசி’ திட்டத்தின் தொடக்கத்தால், இந்த நீண்டகால கூட்டாண்மை இன்னும் ஆழமாகி இருக்கிறது. உளவியல் சமூக மறுவாழ்வு, திறன் மேம்பாடு மற்றும் சமூக மீள்ஒருங்கிணைப்பு ஆகிய துறைகளிலும் இந்த அறக்கட்டளையின் ஆதரவு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மனசி குறித்து:
‘மனசி’ என்பது உளவியல் சிக்கல்கள் கொண்ட பெண்கள் திறனதிகாரம் பெற்று சமூகத்தோடு ஒருங்கிணையும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு முழுமையான திட்டமாகும். இது பின்வரும் ஆதரவுகளை தனது புகலிட இல்லத்தில் வசிக்கும் பெண்களுக்கு வழங்கி வருகிறது:
• முழுமையான மனநல உதவியும் மற்றும் ஆலோசனையும்
• வாழ்க்கைத் திறன்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்கான வாய்ப்புகளை வழங்க தொழில் பயிற்சிகள்
• குடும்பத்தோடு மீண்டும் ஒருங்கிணைதல் மற்றும் மீள் சேர்க்கைக்கான சேவைகள்
• பொது சமூகத்தில், இப்பெண்களும் ஒருங்கிணைக்கப்படுவதற்கான உள்ளடக்கத்திற்கு வழி பாதைகளை உருவாக்குதல்
இத்திட்ட தொடக்க நிகழ்வின் போது உரையாற்றிய ரூப் வி. கே. ஜெயின் அறக்கட்டளையின் பிரதிநிதி கூறியதாவது: “ஆதரவற்ற, கைவிடப்பட்ட பெண்களின் உளவியல் சமூக மறுவாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த முக்கியமான திட்டத்தை நாங்கள் இன்று தொடங்குவதால் இன்றைய நாள் எங்கள் அமைப்பிற்கு ஒரு முக்கியமான தருணமாகும்; பாதிப்படைந்துள்ள ஒவ்வொரு பெண்ணும் சிகிச்சை பெற்று, சிறப்பாக வாழவும், சமுதாயத்தில் மீண்டும் ஒருங்கிணையவும் வாய்ப்பு பெற்றிருக்க வேண்டுமென்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். வெறுமனே ஆதரவு மற்றும் ஆதார வளங்களை வழங்குவதைத் தாண்டி, அவர்கள் தங்களுக்கான மதிப்பையும், சுயாதீனத்தையும் மீண்டும் பெற உதவும் ஒரு உகந்தச் சூழலை உருவாக்குவதே எங்கள் நோக்கம்.”
“இந்த முன்னெடுப்பு திட்டமானது பாதிப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு அவர்கள் வருவது மட்டுமல்ல; இது நம்பிக்கையை மீண்டும் எழுப்பும் ஒரு முயற்சியாகவும், மற்றும் வாழ்க்கையில் அசாதாரணமான சவால்களை எதிர்கொண்ட பெண்களுடன் தோழமை உணர்வோடு ஒருங்கிணைந்து செயல்படும் ஒரு சமூகத்தை உருவாக்கும் நடவடிக்கையாகவும் இருக்கிறது. எவ்வித பயமுமின்றி, சலுகைகளை கேட்டுப் பெற வேண்டிய நிலையின்றி, தங்களது சிந்தனை, பேச்சு மற்றும் முயற்சியின் மூலமே தங்களது வாழ்க்கையை சிறப்பாக வாழ வழிவகுக்கும் இந்த செயல்முறை, அத்தகைய பெண்களுக்கு ஒரு முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தும்; இந்த நோக்கத்திற்கான ஒரு மிக முக்கிய நடவடிக்கையை இத்திட்டத்தின் மூலம் நாங்கள் தொடங்கியிருக்கிறோம்.”
மனசி திட்டம் என்பது, எந்தவொரு பெண்ணும் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்படாமல், அனைவரையும் உள்ளடக்கிய, காருண்யமிக்க மற்றும் பாதிப்புகளை சமாளிக்கும் மீள்திறன் கொண்ட சமூகங்களை உருவாக்க கார்ப்பரேட், குடிமை சமூக அமைப்புகள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த குறிக்கோளையும், தொலைநோக்கு இலட்சியத்தையும் பிரதிபலிக்கிறது.
மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து தொடர்புகொள்ளவும்:
மிஸ். சோரைடா சாமுவேல்
நிர்வாக அறங்காவலர்,
ரெஹபோத் பப்ளிக் சாரிடபிள் டிரஸ்ட்
+91 98840 80863