பராக் ரெஸ்டாரன்ட் மற்றும் கே.ஆர் குழுமத்தின் நிறுவனத் தலைவர் திட்டக்குடி கண்ணன் ரவி அவர்கள் வழங்கிய,முத்தமிழ் சங்கம்
இணைந்து நடத்திய திண்டுக்கல் லியோனி அவர்களின் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.
திட்டக்குடி கண்ணன் ரவி அவர்களின் முன்னிலையில், இந்த நிகழ்ச்சியினை முத்தமிழ் சங்கம் ஏற்பாடு செய்து இருந்தது.
இந்த நிகழ்ச்சியினை முத்தமிழ் சங்கத்தின் சேர்மன் திரு. ராமச்சந்திரன், தலைவர் திரு. ஷா, பொது செயலாளர் சுரேஷ் குமார்,
ஐகான் நிறுவனத் தலைவர் ஜனனி பாலா, ஐஸ்வர்யா ஆகியோர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.
மேலும் இந்த பட்டிமன்றத்தில் திரை இசையில் சிறந்தது காதல் பாடலா? தத்துவ பாடலா? என்ற தலைப்பில் லியோனி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. காதல் பாடல்கள் தான் சிறந்தது என்ற தலைப்பில் கவிஞர் இனியவன், கடலூர் தணிகை வேலன், வழக்கறிஞர் திருமதி தியா சுப பிரியா அவர்களும், தத்துவ பாடலே சிறந்தது என்ற தலைப்பிலே முனைவர்.விஜயகுமார், தேவகோட்டை ராஜன், பொடையூர்.தங்கதுரை ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.
இரண்டு அணியினரும் நகைச்சுவையோடுபேசிய உரை நிகழ்ச்சியை காண வந்தவர்களை வெகுவாக மகிழ்ச்சி அடையச் செய்தது
நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே திண்டுக்கல் ஐ லியோனி அவர்கள் காதலின் சிறப்பு அம்சம் தத்துவத்தின் சிறப்பம்சம் என்று மாறி மாறி நகைச்சுவை உணர்வோடு எடுத்துரைத்து இறுதியாக மனம் மகிழ்வதற்கு வேண்டுமானால் காதல் பாடல்கள் தேவைப்படலாம் வாழ்க்கை இறுதிவரை செழுமையாக வாழ்வதற்கு தத்துவங்களே வழிகாட்டியாக இருக்கும் என்று ஆக தத்துவ பாடலே சிறந்தது என்று தீர்ப்பு வழங்கி நிகழ்ச்சியினை நிறைவு செய்தார்.
வழக்கறிஞர் தியா சுப பிரியா உட்பட
சிறப்பாக பேசிய அனைத்து பேச்சாளர்களை கண்ணன் வெகுவாக பாராட்டி ஊக்க பரிசு மற்றும்நினைவு கேடயம் வழங்கினார்.