வானரன் படத்திற்கு யூ சான்றிதழ்

28

ஆரஞ்சு பிக்சர்ஸ் சார்பில் ராஜேஷ் பத்மனாபன், சுஜாதா ராஜேஷ் தயாரிப்பில் ஸ்ரீராம் பத்மனாபன் இயக்கிய படம் வானரன்.

நாகேஷ் பேரன் பிஜேஷ் நாகேஷ் நாயகனாகவும் அக்ஷயா கதாநாயகியாகவும் நடித்திருக்க தீபா, ஆதேஷ் பாலா, சூப்பர் சிங்கர் புகழ் பேபிவர்ஷினி,ஜீவா தங்கவேல் ஏனைய நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு -நிரன் சந்தர்
இசை -ஷாஜகான்
பாடல்கள் – செந்தமிழ்
எடிட்டிங் – வித்து ஜீவா
மக்கள் தொடர்பு -வெங்கட்

கதை திரைக்கதை
வசனம் இயக்கம் —
ஸ்ரீராம் பத்மநாபன்

இப்படத்தின் சென்சார் முடிந்து தணிக்கை குழுவினர் U சான்றிதழ் தந்து எந்த இடத்திலும் கட் செய்யாமல் சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

இப்படத்தின் First Single Lyrical Video Song யாரோ என் நெஞ்சில்… பாடல் வெளியாகி 1,80,000 views சென்று மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இப்படத்தின் இரண்டாவது Lyrical Video Song நீதானே என் உலகம் … பாடல் இன்று வெள்ளிக்கிழமை (27-6-25) கிழமை மாலை வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது

ஜூலை மாதம் வெளி வருகிறது. இப்படத்தை திரையரங்குகளில் தமிழ்நாடு முழுவதும் பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ் BJP வெளியிடுகிறார்.