அமைச்சர் மு.பெ சாமிநாதன் அவர்கள் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், பெப்சி நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை
தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளன நிர்வாகிகள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை, செய்தித் துறை மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் முன்னிலையில் தலைமை செயலகத்தில் சுமூகமான முறையில் நடைபெற்றது. அடுத்த வாரமும் பேச்சு வார்த்தை நடைபெற உள்ளது.
அது சமயம் பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்ட , தமிழ்நாடு அரசு ஒதுக்கி உள்ள குத்தகை ஒப்பந்த அரசு ஆணையில் சில மாற்றங்கள் செய்து தர வேண்டி ,பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி அவர்கள் மாண்புமிகு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தார்.
மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதிய கோரிக்கை மனுவினை தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவரும், நடிகர் சங்க துணை தலைவருமான பூச்சி முருகன் அவர்களிடம் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி வழங்கினார்