SSPL – (Southern Street Premier League) தென்னிந்திய தெரு கிரிக்கெட் பிரிமியர் தொடரின் பரிசு தொகை 3 கோடி…
கிரிக்கெட் போட்டியின் தொடக்கமே தெருவில் இருந்து தான், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, பாண்டிச்சேரி மற்றும் கோவா ஆகிய தென்னிந்திய மாநிலங்களில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தென்னிந்திய தெரு கிரிக்கெட் பிரிமியர் தொடரின் (SOUTHERN STREET PREMIER LEAGUE) அறிமுக விழா சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.
இதில் தென்னிந்திய தெரு கிரிக்கெட் பிரிமியர் தொடரின் தலைவரும், ஆற்காடு இளவரசர் நவாப் சாதா முகமது ஆசிப் அலி, இப்போட்டின் தூதரும், நடிகருமான ரவி மோகன், தொடரின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் ஆகியோர் கிரிக்கெட் தொடரையும், அதற்கான 5 அடி உயர வெற்றிக்கோப்பையும் அறிமுகம் செய்து வைத்தனர். மேலும் போட்டியின் இலச்சினை மற்றும் நோக்க பாடல் வெளியிடப்பட்டது. இதன் பரிசுத்தொகையாக மூன்று கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த போட்டியின் 10 ஓவர்களில் 8 ஓவர்கள் டென்னிஸ் பந்து கொண்டும், 2 ஓவர் டேப் பந்து கொண்டும் விளையாடப்பட உள்ளது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க உள்ள இந்த போட்டியில் 12 அணிகள் , அணிக்கு 25 வீரர்கள் பங்கு வகிக்க உள்ளனர்.
தென்னிந்தியா மாநிலங்களில் நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் இருந்து 3 நிலை தேர்வுகள் மூலம் போட்டிக்கான வீரர்கள் வெளிப்படைத் தன்மை கொண்டு திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என போட்டி நிர்வாகம் கூறியுள்ளது,
அப்போது மேடையில் பேசிய திரைப்பட நடிகர் ரவி மோகன்…
நான் இந்த போட்டியின் தூதராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, கிரிக்கெட் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று, பள்ளி, கல்லூரிகளில் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து உள்ளேன்.
கிரிக்கெட் போட்டி தொடங்கியது தெருக்களில் இருந்து தொடங்கியது, இளைஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும், இந்த போட்டியை நான் கொண்டாட்டமாக பார்க்கிறேன்.
மற்ற மொழி ஊடகங்கள் இங்கு வந்துள்ளன, எனக்கு கன்னட, மலையாளம் எனக்கு புரியுமே தவிர எனக்கு பேச தெரியாது, தெலுங்கு எனக்கு கொஞ்சம் தெரியும் என்பதால் தெலுங்கில் பேசுகிறேன் நீங்கள் வந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி என தெரிவித்தார்.