திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், 522, டி.டி.கே, சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை
நாளைய இளைஞர்களுக்கு என்ன வரலாற்றை விட்டுச் செல்லப் போகிறோம் என்ற கவலையில் இப்பதிவு.
அண்மையில் தமிழ் மொழி குறித்து நமது மக்கள் நீதி மையத் தலைவர் திரு. கமலஹாசன்அவர்கள் பேசியதை பெரும் சர்ச்சைக்கு உள்ளாக்கி வருகின்றனர். அவர்கள் கூறிப்பிட்டது பழம் பெரும் அறிஞர்கள் பலர் கூறியதை தழுவியே பேசியுள்ளாாகள் என்பதே உண்மை, ஃப்ரான்சிஸ் ஒயிட் எல்லீஸ் அவர்கள் முதன் முதலில் திராவிட மொழிகள் குறித்து பேசியுள்ளார். ராபர்ட் கால்டுவெல் ஒப்பிலக்கண நுாலினை திராவிட மொழியின் சிறப்பை எடுத்து விளக்கியுள்ளார்.
இந்த காலக்கட்டத்தில் அதைவிட மிகி முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது, ஒருவர் கருத்து தெரிவித்தால் உடனடியாக தீவிர முறையில் எதிர் வினை ஆற்ற வேண்டும் என்பது நியாயமில்லை. அதனை கருத்து வாயிலாக வெளியிடலாம். அதற்கு பதிலாக படத்தை கிழிப்பது என்பது எல்லாம் மிகவும் தவறான முன்னுதாரணம் ஆகும்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை மொழிப் பற்று வேண்டும் என்பது தான் தேவையே தவிர, தமிழ் மொழியென சொல்லிக் கொண்டு தீவிரவாதத்தில் ஈடுபட விரும்பியதில்லை. இன்னும் சொல்லப் போனால் 19 நூற்றாண்டிலேயே தமிழ் மொழி பற்றாளர் கூட்டம் சேர்ந்துள்ளது.
இங்கு பல மாநிலங்களில் இருந்து பணிபுரிபவர்கள் உள்ளனர். அப்படி இருக்கையில் அவர்கள் தமிழில் பேச முடியவில்லை என்றால் அவர்களை அச்சுறுத்துவதில்லை. இங்கே இந்திய ஆட்சிப் பணியாளர்கள், காவல் துறை அதிகாரிகள் வட இந்தியர்கள் பலர் மிக அழகாக தமிழ் பேசி வருகிறார்கள். கர்நாடகாவில் அண்மையில் ஒரு வங்கி அதிகாரி அவர்கள் மொழியில் பேசவில்லை என்று அச்சுறுத்தப்பட்டார்.
நாங்கள் எப்பொழுதும் வேற்று மொழி மீது வெறுப்பு காண்பித்ததில்லை. ஆனால் எப்பொழுது எல்லாம் தமிழ் மொழிக்கு இடர் ஏற்படும் வகையில் ஏதேனும் நடந்தால் ஒன்றுக்கூடி நிற்போம். அதற்காக தேசியத்தையும் விட்டுக் கொடுத்ததில்லை. அதற்கு உதாரணமாக நமது முதல்வர் மாண்புமிகு திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் பாகிஸ்தானுடன் நடந்த போர் முடிவுக்கு வந்தவுடன் சென்னையிலே நமது பாரத பிரதமர் மோடி அவர்களுக்கும் மற்றும் ஏனைய அமைச்சர் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்து தேசியக் கொடி ஏந்தி நடைபயணம் மேற்கொண்டார்.
இந்திப் பிரச்சார சபாவின் தலைமையகம் நமது சென்னையில் தான் உள்ளது. எத்தனையோ தமிழர்கள் அதன் வாயிலாக இந்தி கற்று வருகிறார்கள் என்பதே உண்மை.
இத்தருணத்தில் நூல்களை தபால் வழி சிறப்பு சலுகையில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி.
நமது தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு ஓர் வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம், அதாவது பதிப்பாளர்களுக்காக ஏற்படுப்படுத்தப்பட்டுள்ள நலவாரியத்தை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
சுப்பையா முத்துக்குமாரசாமி – மேலாண்மை இயக்குனர் 98846 84666