நஹாஸ் ஹிதாயத் இயக்கும், துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” படத்தில், இயக்குநர் மிஷ்கின் இணைந்துள்ளார்

15

தமிழ் திரைப்பட முன்னணி இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், துல்கர் சல்மானின் 40 வது திரைப்படமான “ஐ அம் கேம்” படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். “RDX” புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கும் இப்படத்தை, துல்கர் சல்மான் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான Wayfarer Films மூலம் தயாரிக்கிறார்.

இப்படத்தின் திரைக்கதையை சஜீர் பாபா, இஸ்மாயில், அபூபக்கர் மற்றும் பிலால் மொய்தூ ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். வசனங்களை ஆதர்ஷ் சுகுமாரன் மற்றும் ஷஹாபாஸ் ரஷீத் எழுதியுள்ளனர்.

பிசாசு, துப்பறிவாளன், அஞ்சாதே, சித்திரம் பேசுதடி, ஓநாயும் ஆட்டின்குட்டியும், போன்ற பெரும்  பாராட்ட்டுக்களைக் குவித்த  தமிழ்ப் படங்களை இயக்கிய இயக்குநர் மிஷ்கின், சூப்பர் டீலக்ஸ், மாவீரன், லியோ, டிராகன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர், துல்கர் சல்மான், ஆண்டனி வர்கீஸ் உடன்  முதன்முறையாக இணைந்து  ஐ அம் கேம்  படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்களின் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தொழில் நுட்ப குழு விபரம்
ஒளிப்பதிவு – ஜிம்ஷி காலித்
இசை – ஜேக்ஸ் பெஜாய்
படத்தொகுப்பு – சமன் சாக்கோ
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அஜயன் சல்லிசேரி
ஒப்பனை – ரோனெக்ஸ் சேவியர்
ஆடை – மாஷர் ஹம்சா
புரொடக்ஷன் கன்ட்ரோலர் – தீபக் பரமேஸ்வரன்
இணை இயக்குநர் – ரோஹித் சந்திரசேகர்,
வி.எக்ஸ்.சி.குமார்
பாடல் வரிகள். தௌஃபீக் (எக்வொயிட்)
போஸ்டர் டிசைன் – டென் பாயிண்ட்
சவுண்ட் டிசைன் – சிங்க் சினிமா
சவுண்ட் மிக்ஸிங் – கண்ணன் கணபத்
ஸ்டில்ஸ் – எஸ்.பி.கே