இந்தியாவில் ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் எண்டோலிஃப்ட் X® அறிமுகம் இந்தியாவில் முன்னோடித்துவமாக மைக்ரோஃபைபர் அடிப்படையில் அறுவைசிகிச்சை அல்லாத அழகியல் சிகிச்சை

24

இந்தியா, ஏப்ரல் 26, 2025: ஸ்பெக்ட்ரா மெடிக்கல் இந்தியா பிரைவேட் லிமிடெட், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இஃபோடோன்® (Eufoton®) நிறுவனத்தின் ஒத்துழைப்போடு இந்தியாவில் எண்டோலிஃப்ட் X® என்பதனை இன்று அறிமுகம் செய்திருக்கிறது. சருமத்தை இறுக்கமாக்கவும், கொழுப்பை குறைக்கவும் மற்றும் குறைவான அசௌகரியம் மற்றும் குறைவான ரெக்கவரி காலஅளவுடன் முகம் மற்றும் உடலை சீரமைத்து வடிவமைக்கவும் உதவுவதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு மிக நவீன, அறுவைசிகிச்சை அல்லாத லேசர் சிகிச்சையாக எண்டோலிஃப்ட் X® அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு லேசர் சாதனத்துடன் இணைக்கப்பட்ட புத்தாக்கமான கண்ணாடி இழை, மைக்ரோ ஃபைபர்களை எண்டோலிஃப்ட் X® பயன்படுத்துகிறது.
சென்னையில் அமைந்துள்ள ஸ்பெக்ட்ரா நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் எண்டோலிஃப்ட் X®-ன் அறிமுக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த புரட்சிகர தொழில்நுட்பத்தை நேரடியாக பார்வையிட வழிவகுத்த இந்நிகழ்வில் சருமவியல் நிபுணர்கள், பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை மருத்துவர்கள், ஊடக பணியாளர்கள் மற்றும் அழகியல் தொழில்துறை வல்லுநர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். பிற சர்வதேச சந்தைகளில் ஏற்கனவே பிரபலமாக திகழும் இச்சிகிச்சை, இப்போது இந்தியாவில் அழகியல் சிகிச்சைகள் வழங்கப்படும் முறையில் மேம்பட்ட மாற்றத்தை உருவாக்கவிருப்பது நிச்சயம்.
உலகளவில் அங்கீகாரம் பெற்ற புத்தாக்க கண்டுபிடிப்புகளையும், தயாரிப்புகளையும் இந்தியாவின் விரிவடைந்து வரும் அழகியல் சந்தைக்கு கொண்டு வருவதற்கான தனது தொலைநோக்கு இலட்சியத்தை பகிர்ந்து கொண்ட ஸ்பெக்ட்ரா மெடிக்கல் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயலாக்க அதிகாரியுமான திரு. ராம், கூறியதாவது: “இந்தியாவின் அழகியல் தயாரிப்புகளுக்கான தொழில்துறை மிகப்பெரிய நிலைமாற்றத்தை காணும் நிலையில் இருக்கிறது. இந்த பரிணாம வளர்ச்சியில் எண்டோலிஃப்ட் X® முன்னணியில் இருக்கிறது. மிக குறைவான இடையீட்டு நடவடிக்கையின் மூலம் வியக்க வைக்கும் சிறப்பான விளைவுகளை பெறுவதற்கு இத்தொழில்நுட்பம் திறனளிக்கிறது. அழகு, நம்பிக்கை மற்றும் சௌகரியம் என்ற நவீன இந்தியர்களின் இனப்பண்புகளோடு மிகச் சரியாக ஒன்றிப் போகின்றன.”
இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிரபல பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணரான டாக்டர். ஜெயந்தி ரவீந்திரன், சென்னையைச் சேர்ந்த சருமவியல் நிபுணர்கள் டாக்டர். சரண்யா மற்றும் டாக்டர். விக்னேஷ் கார்த்தி மும்பையை சேர்ந்த டாக்டர். பிரியம் பகத் ஆகியோர் பாரம்பரியமான முகப் பொலிவேற்றங்களுக்கு எண்டோலிஃப்ட் X® எப்படி ஒரு திறன்மிக்க மாற்றாக இருக்க முடியுமென்று விளக்கிக் கூறினர். கொலாஜென் -ஐ இயற்கை முறையில் இறுக்கமாக்க இது உதவுகிறது, முக வளைவு மட்டங்களை மேம்படுத்துகிறது மற்றும் கைகள் மற்றும் வயிற்றில் சரும தளர்ச்சிப் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது என்பதை விளக்கி முன்னிலைப்படுத்தினர். நோயாளிகளுக்கு எண்டோலிஃப்ட்X® சிகிச்சையின் மூலம் கிடைத்த உண்மையான விளைவுகளை காட்டுகிற செய்முறை விளக்கத்தை வழங்கும் ஒரு வீடியோ காட்சியும் இந்நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டது.
யூஃபோடன் நிறுவனத்தைச் சேர்ந்த Ms. பியான்கா கொசுலிச் பேசுகையில், “இந்தியாவில் எண்டோலிஃப்ட் X® அறிமுகத்தின் மூலம் அழகியல் செயல்தளத்தில் உண்மையிலேயே ஒரு தனித்துவமான சிகிச்சையை கொண்டு வருவதில் நாங்கள் அளவிலா உற்சாகம் கொள்கிறோம். சருமத்திற்கு கீழே ஆழமாகச் சென்று அதனை இறுக்கமாக்கவும், கொழுப்பை குறைக்கவும், கொலாஜென்-ஐ அதிகரிக்கவும் மிக மெல்லிய லேசர் ஃபைபர்களை இது பயன்படுத்துகிறது. இவையனைத்தையும் அறுவைசிகிச்சையின்றி அது செய்கிறது. இச்சிகிச்சையின் மூலம் கிடைக்கும் விளைவுகள் இயற்கையானவை, நீண்ட காலம் நிலைக்கக் கூடியவை மற்றும் குறைவான காலத்திற்குள் கிடைக்கக்கூடியவை; இதன் காரணமாக உடலுக்குள் ஊடுருவல் இல்லாத சிகிச்சைகளை பொறுத்தவரை, நடப்பு நிலையை மாற்றக்கூடியதாக இந்த சிகிச்சை இருக்கிறது” என்று கூறினார்.
உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பால் (FDA) ஒப்புதல் அளிக்கப்பட்ட இந்த மருத்துவச் செயல்முறையின் பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் பற்றி ஆழமான தகவலையும், அறிவையும் பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை வழங்கும் வகையில் நடைபெற்ற கேள்வி & பதில் அமர்வுடன் இந்நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது.
எண்டோலிஃப்ட் X® இப்போது இந்தியாவெங்கிலும் முன்னணி அழகியல் கிளினிக்குகளில் கிடைக்கப் பெறுகிறது. இதன் உடனடி விளைவுகளுக்காகவும், இயற்கையான சரும மீளுருவாக்கம் மற்றும் உடனடி பலன் ஆகிய சிறப்பியல்புகளுக்காக நன்கு அறியப்படும் இச்சிகிச்சை அறுவைசிகிச்சையை மேற்கொள்ளாமல் தங்களது தோற்றத்தை புதுப்பித்து அழகாக்க விரும்பும் நபர்களுக்கு இந்த சிகிச்சை மிக பொருத்தமானதாகும்.
இச்சிகிச்சை குறித்து அதிகம் அறிய அல்லது மருத்துவருடன் கலந்தாலோசனைக்கு முன்பதிவு செய்ய காணவும்: www.endolift.com