ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதிரி பாடிய பாடல்கள் குலுமணாலியில் படமாக்கப்பட்டது!

15

பழநிபாரதி எழுதிய கொஞ்சி கொஞ்சி பேசவா… என்ற பாடலையும், தேன்மொழி எழுதிய வல்லினமா மெல்லினமா இடையினமா… என்ற இரு பாடல்களை பாடியுள்ளார். பாடியதோடு மட்டும் இல்லாமல், பாடல் காட்சி படப்பிடிப்பு குலுமணாலியில் நடந்த போது, பாடல் காட்சியில் பங்கேற்று, படத்தின் மேக்கிங் பாடலுக்கு குலுமணாலி மலைப் பிரதேசங்களில் பாடி, நடித்துள்ளார் இஷ்ரத் காதிரி.

ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில், அனுராதா அன்பரசு தயாரிக்கும் படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”.

நாட்டின் எல்லையை பாதுகாக்கும் வீரரின் காதல் கதை தான் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”

கதையின் நாயகனாக வீர அன்பரசு நடிக்கிறார். ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். இவர்களுடன் ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோர் நடிக்கின்றனர்.

கதை, திரைக்கதை எழுதி கதையின் நாயகனாக நடித்து, இயக்குகிறார் வீர அன்பரசு. இளையராஜா அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் சிவராமன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு வில்லியம்ஸ், நடனம் கென்னடி, டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், செட் அசிஸ்டன்ட் நாசரேத் பழனி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனுராதா அன்பரசு.

குலுமணாலி, ஜவ்வாது மலை ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது!