நாக சைதன்யா மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். மீன்பிடி தொழிலுக்காக கடலுக்கு செல்பவர்களின் உயிர் உத்திரவாதம் இல்லை என்பதால், தன் காதலன் மீன் பிடிக்க கடலுக்கு செல்வதை நாயகி சாய் பல்லவி விரும்பவில்லை.
அதனால், மீன் பிடிக்கும் தொழிலை விட்டுவிடும்படி சொல்கிறார். நாயகியின் பேச்சையும் மீறி நாக சைதன்யா மீன் பிடிக்க செல்கிறார்.
அப்போது அவரும், அவருடன் சென்ற மீனவர்களும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றுவிடுவதால், பாகிஸ்தான் கடற்படை கைது செய்கிறது. மறுபக்கம் சாய் பல்லவிக்கு கருணாகரனுடன் திருமண ஏற்பாடு நடக்கிறது.
முடிவில் நாக சைதன்யா பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுதலையானாரா?
சாய் பல்லவியை திருமணம் செய்தாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘தண்டேல்’
கதையின் நாயகனாக மீனவராக நடித்திருக்கும் நாக சைதன்யா மீனவர் கதாப்பாத்திரமாகவே உடல் மொழி மற்றும் பேச்சு மொழி என இயல்பான நடிப்பில் காதல் காட்சிகளிலும் , அதிரடி ஆக்க்ஷன் காட்சிகளிலும் கதையின் நாயகனாக அசத்துகிறார் .