ஒரே மேடையில் அபிநயா சிரோன்மணி மற்றும் நாட்டிய தாரகை பட்டம் பெற்ற செல்வி சுதிக்ஷா

மண் பானையின் மீது நடனம் ஆடி அசத்தினார்.

86

ஒரே மேடையில் அபிநயா சிரோன்மணி மற்றும் நாட்டிய தாரகை பட்டம் பெற்ற செல்வி சுதிக்ஷா

 

சென்னை‌ சேர்ந்த மாணவி பசுமரத்தி சுதிக்ஷா, அபிநயா நாட்டிய குழுவில் பயின்றவர் இவரது நடன நிகழ்வை பாராட்டி அபிநயா சிரோன்மணி மற்றும் நாட்டிய தாரகை பட்டம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை அபிநயா நாட்டியாலயாவில் நாட்டியப் பயிற்சியை நிறைவு செய்து சேத்துபட்டு சின்மயா ஹெரிடேஜ் சென்டர் தபோவன் ஹாலில் நடைபெற்ற நடன அரங்கேற்ற நிகழ்வில் பெருந்திரளானோர் பங்கேற்றனர். தமிழக கலை பண்பாட்டுத் துறை துணை இயக்குனர் பி.ஹேமநாதன் மற்றும் பரதநாட்டிய கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் பேராசிரியர் கே.மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டனர். இந்நிலையில் அபிநயா நாட்டியாலயா சார்பில் அபிநயா சிரோன்மணி பட்டமும் பேனா முனை பத்திரிகையாளர்கள் – சமூக ஊடக சங்கம் மற்றும் ஸ்ரீவாசவி ஜோதி – மாத இதழ் சார்பில் நாட்டிய தாரகை பட்டமும் வழங்கப்பட்டது. திருவதிகை, திருவையாறு, தஞ்சாவூர் சின்னமேளம், வேலூர் பொற்கோயில் திருப்பதியில் நடன நீராஞ்சனம், பிரகதீஸ்வரர் கோயில் மற்றும் குருவாயூர் உள்ளிட்ட புகழ்பெற்ற திருத்தலங்களில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். இவரது திறமையால் பல்வேறு மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று விருதுகளையும் பெற்றுள்ளார்.