ரோபோவை மையமாக வைத்து உருவாகியிருக்கும் குறும்படம் மெட்டா பியூட்டி

81

சமீப காலமாக தமிழ் சினிமாவில் சைன்ஸ் பிக்சன் கதைகள் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளது அதில் பல படங்கள் வெற்றியடைந்துள்ளது.அந்தவகையில் விரைவில் வெளியாக இருக்கும் ஒரு குறும்படம் மெட்டா பியூட்டி இந்த படத்தின் இயக்குனர் ராஜா எம் முத்தையா. படத்தில் முக்கிய கதாபாத்திரமாக ஒரு ரோபர்ட் ஆக திவ்யலெட்சுமி என்ற நடிகையும், அதை உருவாக்கும் விஞ்ஞானியாக அர்ச்சனா உன்னிகிருஷ்ணன் அவர்களும் மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் விஜயராஜ், இளங்கோ சுரேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.குறிப்பாக இந்த ரோபர்ட்யை மையமாக வைத்து தான் இந்த கதை உருவாகியுள்ளது. அடுத்த நூற்றாண்டில் இவ்வுலகை கலக்க இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியின் ஒரு அங்கமான ரோபோட்டை கதை மூலமாக வைத்து உருவாகி இருக்கும், ஒரு பெண்ணியம் சார்ந்த (பாலியல் வன்புணர்வுக்கு எதிரான) ஒரு விழிப்புணர்வு பைலட் படமான #Meta_Beauty குறும்படத்தின் #firstlook மற்றும் #lyrical_anthem நடிகர், இசையமைப்பாளர் திரு. பிரேம்ஜி அமரன் அவர்கள்,இயக்குனர் திரு.தரணிதரன் அவர்கள், படத்தொகுப்பாளர் திரு.ரூபன் அவர்கள், பிரபல பாடகி திருமிகு.சைந்தவி அவர்களால் வெளியீடு செய்யப்பட்டு இப்போது சமூக வலைதளங்களில் படுவைரலாக பரவி வருகிறது.

தயாரிப்பு: தங்கதுரைபாண்டியன்

கதை-இயக்கம்-பாடல்
ராஜா எம் முத்தையா

இசை: GKV
பாடியவர்: ஶ்ரீநயா நாகேஸ்வர்

மக்கள் தொடர்பு: குமரேசன்

ஒளிப்பதிவு
தனசேகர் விஜயகுமார்/சிவன்

நடிப்பு:
அர்ச்சனா உன்னிகிருஷ்ணன்

திவ்யலெட்சுமி