மலையாள சினிமாவில் கால் பதிக்கும் நடிகர் அர்ஜுன் தாஸ் வெற்றி இயக்குநர் அகமது கபீரின் அடுத்த திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் !

176

நடிகர் அர்ஜுன் தாஸ், இயக்குநர் அகமது கபீர் இயக்கும் புதிய திரைப்படம் மூலமாக, மலையாள சினிமாவில் நாயகனாக களமிறங்குகிறார். அகமது கபீரின் ‘ஜூன்’, ‘மதுரம்’ மற்றும் ‘கேரளா க்ரைம் ஃபைல்ஸ் வெப் சீரிஸ்’ என, அனைத்து படைப்புகளும் பெரும் வெற்றியைக் குவித்துள்ள நிலையில், இந்த புதிய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஹிருதயம்’, குஷி, & ஹாய் நானா ஆகிய படங்களில் மாயாஜால இசைக்கு சொந்தக்காரரான ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைக்கிறார். காதலை மையமாக கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. படத்தில் பணியாற்றவுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. அற்புதமான இந்த கூட்டணியின் அடுத்தகட்ட தகவல்கள் பற்றி அறியக் காத்திருங்கள்.