திரைவிமர்சனம் டிரைவர் ஜமுனா

214

முன்னாள் எம்எல்ஏ ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டும் கூலிப்படை கும்பலின் கார் வழியில் விபத்துக்குள்ளாகிறது. என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கும் அவர்கள் வாடகைக் கார் ஒன்றை புக் செய்கிறார்கள். அந்தக் காரை ஓட்டி வரும் ஜமுனாவுக்கு (ஐஸ்வர்யா ராஜேஷ்) அவர்கள் மீது சந்தேகம் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் மறுக்கும் ஜமுனா, வேறு வழியில்லாமல் அவர்களை காரில் ஏற்றிக்கொள்கிறார். வழியில் அவர்கள் கூலிப்படையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வர, அடுத்து என்ன நடந்தது? முன்னாள் எம்எல்ஏ கொல்லப்பட்டாரா? அதன் பின்னணி என்ன? – இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் படம்தான் ‘டிரைவர் ஜமுனாஎளிமையான குடும்பத்து பெண்ணாக நடித்து அசத்தியிருக்கிறார் ஐஷ்வர்யா ராஜேஷ். கதாப்பாத்திரத்திற்கு மிக அழகாக தன்னை பொருத்தியிருக்கிறார். கார் ஓட்டுனர் பணியில் இருக்கும்போது எதிரிகளிடம் தன் எதிர்ப்பை உடல் மொழியால் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெறுகிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிரடி காட்டி பாராட்டை பெறுகிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் இவரின் கடின உழைப்பு தெரிகிறது.
மொத்தத்தில் டிரைவர் ஜமுனா – விறுவிறுப்பு.