RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் ‘மண்டாடி’ – 2026 கோடை விடுமுறைக் கொண்டாட்டமாக வெளியாகவிருக்கிறது!

27

RS இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’, பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இப்படம் 2026 ஆம் ஆண்டு கோடை விடுமுறையைக் குறிவைத்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. நடிகர் சூரியின் திரைப்பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாக ‘மண்டாடி’ படம் இருக்கும். இதுவரை அவர் நடித்த படங்களில் இதுவே பெரும் பொருட்செலவும், மிகுந்த சவால்களும் கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கதைக்காக சூரி தனது உடல் தோற்றத்தாலும் மெனக்கெட்டு பல மாற்றங்களை செய்திருக்கிறார். நடிகர் சூரியை முற்றிலும் புதிய பரிமாணத்தில் இந்த படம் காட்டும். இந்த படத்தின் மிக முக்கியமான பலம் சூரியின் அபாரமான தோற்றம் தான். கதையாக கடல் சார்ந்த ஆக்‌ஷன் அதிரடி காட்சிகள், ஆபத்தான சண்டைக் காட்சிகள் நிறைந்த படம். குறிப்பாக, படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் படகுப்பந்தய (sailboat racing) காட்சிகளுக்காக, பல மாதங்கள் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார் சூரி.
‘மண்டாடி’ படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக உள்ள பான்-இந்தியத் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படம் மொழிகளைக் கடந்து அதிகம் உணர்வுகளால் பேசக்கூடிய படமாக அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும்.
படத்தின் மையமான காட்சி படகுப்பந்தய காட்சிகளே. அதிவேகமும், பதற்றமும் நிறைந்த இந்த காட்சிகள், இதுவரை காணாத ஒரு புதிய திரை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் தத்ரூபமாகவும், எதார்த்தமாகவும் திரையில் கொண்டுவர, சர்வதேச ஆக்ஷன் நிபுணர்களுடன் இணைந்து படக்குழு பணியாற்றியுள்ளது. உலக தரத்திலான விளையாட்டு கேமராக்கள் மற்றும் நவீன படப்பிடிப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
படத்தின் ஆக்ஷன் வடிவமைப்பை பிரபல ஸ்டண்ட் கோரியோகிராபர் பீட்டர் ஹெய்ன் மேற்கொண்டுள்ளார். சுமார் 60 நாட்கள் அவர் இந்த படத்திற்காக பணியாற்றியுள்ளார். சுமார் ₹75 கோடி செலவில் உருவாகியுள்ள இந்த படம், சூரியின் நடிப்பில் முதல் பிரம்மாண்டப் படமாக இருக்கும்.
தொழில்நுட்ப ரீதியாகவும் ‘மண்டாடி’ ஒரு வலுவான குழுமை கொண்டுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசை, ஒளிப்பதிவை S.R. கதிர் ISC கவனிக்கிறார். கலை இயக்கம் D.R.K. கீரன், எடிட்டிங் பிரதீப் E. ராகவ் மேற்கொள்கிறார். ஒலிப்பதிவு பிரதாப், விஷுவல் எஃபெக்ட்ஸ் R. ஹரிஹர சுதன் தலைமையில் நடைபெறுகிறது.
படத்தின் தொழில்நுட்ப குழு:
இணை தயாரிப்பாளர்: V. மணிகண்டன்
உடை வடிவமைப்பு: தினேஷ் மனோஹரன்
நடன அமைப்பு: ஆசார்
இணை எழுத்து: R. மோகனவாசந்தன் & திரள் சங்கர்
மேக்கப்: N. சக்திவேல்
காஸ்ட்யூமர்: நாகு
DI: கிளெமெண்ட்
பப்ளிசிட்டி ஸ்டில்ஸ்: கபிலன்
ஸ்டில் புகைப்படக் கலைஞர்: G. ஆனந்த் குமார்
பப்ளிசிட்டி டிசைன்: Aesthetic Kunjamma
பிரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ்: S.P. சொக்கலிங்கம்
எக்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்: G. மகேஷ்
PRO: ரேகா