கவின் – ஆண்ட்ரியா ஜெரெமையா நடித்த ‘மாஸ்க்’ திரைப்படம், ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது !!

23

முன்னணி ஓடிடி தளமான ZEE5, கவின் மற்றும் ஆண்ட்ரியா ஜெரெமையா நடிப்பில், சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற, ஆக்சன்-திரில்லர் திரைப்படமான ‘மாஸ்க்’-ஐ ஜனவரி 9, 2026 முதல் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இப்படத்தை புதுமுக இயக்குநர் விகர்னன் அசோக் எழுதி இயக்கியுள்ளார். தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது.

மாஸ்க் ஒரு பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம். பணம் மற்றும் லாபமே வாழ்க்கை என நினைக்கும் தனியார் டிடெக்டிவான வேலு (கவின்) என்பவனை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. ஒரு குற்ற சம்பவத்தில் அவனது வாழ்க்கை, மர்மமான முகமூடி அணிந்த கும்பல், நற்பணிகளின் பெயரில் செயல்படும் சக்திவாய்ந்த அமைப்புகள் மற்றும் பல அரசியல்வாதிகளின் வாழ்க்கையை புரட்டிப் போடக்கூடிய ரகசியங்களுடன் மோதும் போது முற்றிலும் தலைகீழாக மாறுகிறது. விசாரணை தீவிரமடையும் போது, வேலு குற்றத்தின் உண்மையை மட்டுமல்ல, தனது செயல்களின் விலையையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

படம் குறித்து நடிகர் கவின் கூறுகையில்,
“மாஸ்க் ஏற்கனவே திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்போது ZEE5 மூலம் இன்னும் பெரிய ரசிகர்கள் வட்டத்தை அடையப் போவதில் மகிழ்ச்சி. வேலு பல அடுக்குகளைக் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரம். அந்த கதாபாத்திரத்தின் ஆழத்தை அதிகமானோர் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர், தயாரிப்பாளர் வெற்றிமாறன் கூறுகையில்..,
“இந்த படம் பேசும் கருக்கள் காலத்தை கடந்தவை. மாஸ்க் இப்போது ZEE5-ல் வெளியாகும் நிலையில், முதன் முறையாக இதை அனுபவிக்கும் புதிய பார்வையாளர்களிடம் சென்று சேரும் வாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி”.

இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ஒளிப்பதிவு – ஆர்.டி. ராஜசேகர்
படத்தொகுப்பு – ஆர். ராமர்.

ஆக்ஷன், சஸ்பென்ஸ் மற்றும் ஆழமான கதை சொல்லலுடன், மாஸ்க் திரில்லர் ரசிகர்களுக்கு ஒரு அசத்தலான அனுபவத்தை வழங்கும் படமாக உருவாகியுள்ளது.

‘மாஸ்க்’ – ஜனவரி 9, 2026 முதல் ZEE5 தளத்தில், தமிழில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.