நெருப்பைத் தொட்டு தான் சூட்டை உணர முடியும் என்பது உண்மை அல்ல.
வாழ்க்கையில் பட்டு தான் கற்க முடியும் என்பதும் உண்மையல்ல. பார்ப்பதை,கேட்பதை உணர்வுபூர்வமாக உணர்ந்தாலே நாம் வாழ்வதற்கான அர்த்தம் புரிந்து விடும்.அப்படி ஒரு உண்மை காதல் ஒவ்வொரு வீட்டிலும் இன்றும் இருக்கத்தான் செய்கிறது.அப்படிப்பட்ட காதலை தான் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது. “மனசும் மனசும் சேர்ந்தாச்சு”ஒவ்வொருவரின் பருவ வயதில் ஏற்படும் காதல் உருவம் இல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் சேர்ந்தாலும் பிரிந்தாலும் நம் நினைவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது.காற்றும், காதலும் ஒன்று தான் அது தான் நம்மை இயங்க வைக்கிறது.
என்பதை உணரும் நாம் மற்றவருக்கு உணர்த்த முடியாது உணர்வில் கலந்த காதல் உண்மையில் என்ன செய்யும் அந்த காதலை நாம் கடந்த பாதை கடக்க முடியாமல் கண்ணீருடன் காலத்தை கடத்திக் கொண்டிருக்கும் நம் மனநிலை இவற்றை கூறுவதே “மனசும் மனசும் சேர்ந்தாச்சு”பார்ப்பவர்களின் ஒவ்வொரு மனதையும் நிச்சயம் ஸ்கேன் செய்யும்.ரிசல்ட் உங்களின் ஆதரவில் இந்த படத்திற்கு கிடைக்கும் வெற்றி தான் என்று இயக்குனர் S.அருள்பிரகாசம் DFT கூறினார்.பழம்பெரும் நடிகர் நாகேஷ் அவர்களின் பேரனும் நடிகர் ஆனந்த் பாபுவின் மகனுமான கஜேஸ் நாகேஷ் கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் ஷாஜிதா கதாநாயகியாக நடிக்க,கராத்தே ராஜா,சத்யன் அன்புச்செல்வி இவர்களுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர்
S.அருள்பிரகாசம் அவர்கள் நடிக்கிறார். மற்றும் முன்னணி நடிகர்கள் நடித்து உருவான இந்த படம் இறுதி கட்ட பட வேலைகள் முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது…
இசை A.நந்தகோபால்
வசனம்
கிரேசன் ஜோஸ்.F
நடனம் மாரி வீரராகவன்
ஒளிப்பதிவு
திருமலை கோவிந்தன்
சண்டைப்பயிற்சி
வாலி லோகு
எடிட்டிங் விஜய்
PRO P.மணிகண்டன்
கதை,திரைக்கதை,
இயக்கம்
S.Arulprakasam
தயாரிப்பு
SAF Production
S.அருள்பிரகாசம்