செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை..

31

அஸ்வினி- மணிவண்ணன் தம்பதிகள் இணைந்து எழுதி இயக்கிய கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை குறும்படத்தின் ஓடிடி உரிமையை வாங்கிய ஷார்ட் ஃபிலிக்ஸ் நிறுவனம்…

கன்னியாகுமரி மாவட்டம் மருதூர் குறிச்சி கிராமத்தைச் சார்ந்த அஸ்வினி என்ற இளம் இயக்குனரின் முதல் குறும்படம் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை..

யாரும் கெட்ட வார்த்தை பேசக்கூடாது என்பதற்காக,கெட்ட வார்த்தையில் பேசி எடுக்கப்பட்ட குறும்படம் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை

யாகாவாராயினும் நாகாக்க என்னும் திருக்குறள் மையப்படுத்தி எடுக்கப்பட்ட குறும்படத்திற்கு

இயக்குனர் சமுத்திரக்கனி மற்றும் நடிகர் சூரி ஆகியோர் தங்களது வாய்ஸ் ஓவர் கொடுத்து இக்குறும்படத்திற்கு வலு சேர்த்துள்ளனர்..

இக்குறும்படத்தை பற்றி இயக்குனர் அஸ்வினி மற்றும் மணிவண்ணன் கூறியதாவது:

நாங்கள் இந்த குறும்படத்தை எடுக்க முக்கிய காரணம்
யாரும் கெட்ட வார்த்தையே உறவுகளுக்கு இடையே பேசக்கூடாது என்பது தான்..

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் முருகானந்தம், இமான் அண்ணாச்சி, விஜய் டிவி பவித்ரா, அட்ரஸ் கார்த்திக் மற்றும் பலர் நடித்துள்ளனர் ‌‌

இப்படத்திற்கு ஒளிப்பதிவு ஜேசம் வில்லியம்ஸ்,
இசை அருணகிரி படத்தொகுப்பு சான் லோகேஷ் கலை இயக்குனர் என்.கே ராகுல்

இப்படம் முழுக்க முழுக்க ஒரே நாள் சென்னை வளசரவாக்கத்தில் எடுத்து முடிக்கப்பட்டது..