Sony LIV வழங்கும் பசுபதி நடித்த குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன் – உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்!

135

Sony LIV தனது புதிய தமிழ் ஒரிஜினல் தொடரான குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன் டிரெய்லரை வெளியிட்டுள்ளது. டிசம்பர் 5 முதல் ஸ்ட்ரீமிங்குக்கு வர உள்ள இந்த தொடரின் ஒவ்வொரு முடிவின் போதும் மர்மங்கள் மேலும் பெரிதாகி கதையின் சுவாரசியத்தை அதிகமாக்கும். மேலும் குற்ற உணர்விற்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசங்களை புரிந்து கொள்ள முடியாமல் தவிக்க கூடிய ஒரு உளவியல் பயணத்தை நமக்கு அளிக்கும்.

குற்றம் புரிந்தவன் உங்களிடம் ஒரு கேள்வியை முன்வைக்கிறது: நம்பிக்கைக்கும் சட்டத்திற்கும் நடுவே சிக்கியபோது ஒருவர் எவ்வளவு தூரம் செல்ல தயாராக இருப்பார்? நல்ல நோக்கில் செய்த செயல்களே எதிர்பாராத ஆபத்தான விளைவுகளை உண்டாக்க, மறைக்கப்பட்ட மர்மங்கள் வெளிப்படத் தொடங்குகின்றன. ஒவ்வொரு மறைக்கப்பட்ட உண்மையும் வெளிவரத் தொடங்கும் போது, கதையில் பதட்டமும், உளவியல் ரீதியாக விடுபடுவதற்கும் மற்றும் குற்ற உணர்ச்சிக்கும் இடையே நடக்கும் நுண்ணிய போராட்டமும் வெளிப்படுகிறது.

செல்வமணி இயக்கத்தில், ஹாப்பி யூனிகான்/ஆக்புல்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள குற்றம் புரிந்தவன்: தி கில்டி ஒன் தொடரில் தேசிய விருது பெற்ற லட்சுமி பிரியா சந்திரமௌலி துயரத்தில் உடைந்த தாயாகவும், விதார்த் உறுதியான காவலராகவும் நடித்துள்ளனர். மர்மம், மனக்குழப்பம் மற்றும் உணர்ச்சி மிகுந்த உணர்வுகள் நிரம்பிய இந்த த்ரில்லர் பார்வையாளர்களை பெரிதும் ஈர்க்கும்.

டிசம்பர் 5 முதல், எக்ஸ்க்ளூசிவாக Sony LIV-ல் ஸ்ட்ரீமிங்!