‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’ – 7வது பதிப்பில், முன்னோடி ‘மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கிய காவேரி மருத்துவமனை

25

சென்னை, நவம்பர் 16, 2025: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, தனது அதிநவீன ‘காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை’ தொடங்கியுள்ளது. இது, உடல் பருமன், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான கோளாறுகளுக்கு ஒரு ஒருங்கிணைந்த, பல்துறை அணுகுமுறையுடன் தீர்வுகாண்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு முழுமையான மையமாகும். நீரிழிவு தடுப்பு மற்றும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஊக்குவிக்கும் மருத்துவமனையின் வருடாந்திர பொது விழிப்புணர்வு முயற்சியான ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’-ன் 7வது பதிப்பின் போது இந்த தொடக்க விழா நடைபெற்றது.

காவேரி ‘மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தை, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான டாக்டர். ஐசரி K. கணேஷ் அவர்கள் தொடங்கி வைத்துப் பேசுகையில், நோய் முன்தடுப்பு சுகாதாரப் பாதுகாப்பில் காவேரி மருத்துவமனையின் முன்னோடிப் பங்கை பாராட்டினார். “காவேரி மெட்டபாலிக் வெல்நஸ் மையத்தின் தொடக்கமானது, நோய் முன்தடுப்பு சிகிச்சை பராமரிப்பானது, வாழ்க்கை முறை விழிப்புணர்வை மேம்படுத்தும் ஒரு முக்கிய படிநிலையைக் குறிக்கிறது. வாழ்க்கை முறை நோய்கள் பெருகிவரும் இன்றைய காலகட்டத்தில், ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ்’ போன்ற திட்டங்கள், சமூகத்தை ஈடுபடுத்துவதிலும், விழிப்புணர்வு மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கைகளிலிருந்தே ஆரோக்கியம் தொடங்குகிறது என்ற செய்தியைப் பரப்புவதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. நலவாழ்வை ஒரு கூட்டுப் பொறுப்பாக மாற்றுவதற்கான காவேரி மருத்துவமனையின் தொடர்ச்சியான முயற்சிகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன்.” என்று கூறினார்.

ICMR தரவுகளின்படி, இந்தியாவில் 100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நீரிழிவு நோயுடனும், கிட்டத்தட்ட 135 மில்லியன் மக்கள் உடல் பருமனுடனும் வாழ்ந்து வருகின்றனர். இது, வளர்சிதை மாற்ற நலனில் கவனம் செலுத்தும் ஒருங்கிணைந்த பராமரிப்புக்கான வலுவான தேவையை உணர்த்துகிறது. புதிதாக நிறுவப்பட்டுள்ள இந்த மையம், நீரிழிவு மருத்துவம், நாளமில்லாச் சுரப்பியல், ஊட்டச்சத்து, பிசியோதெரபி, உளவியல் மற்றும் வாழ்க்கை முறை மருத்துவம் ஆகிய துறைகளின் நிபுணர்களை ஒன்றிணைத்து, தனிப்பயனாக்கப்பட்ட மதிப்பீடுகள், கட்டமைக்கப்பட்ட எடை மேலாண்மை திட்டங்கள் மற்றும் நீண்ட கால வளர்சிதை மாற்ற சமநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முன்தடுப்பு சிகிச்சை பராமரிப்பு திட்டங்களை வழங்குகிறது.

இந்நிகழ்ச்சியில் பேசிய காவேரி மருத்துவமனையின் முதுநிலை நீரிழிவு மருத்துவர் டாக்டர். K. பரணிதரன், “பெரும்பாலும் உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை தனித்தனி பிரச்சனைகளாக மக்கள் கருதுகின்றனர். ஆனால் அவை அனைத்தும் ஒரே மூலத்திலிருந்து, அதாவது மோசமான வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திலிருந்தே உருவாகின்றன. இந்த மையத்தின் மூலம், நாங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், ஆரம்பகட்ட சிகிச்சைகளை வழங்குவதையும், சிக்கல்கள் உருவாவதற்கு முன்பே தனிநபர்கள் தங்கள் வளர்சிதை மாற்றம் மீதான கட்டுப்பாட்டை மீட்டெடுக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.” என்று கூறினார்.

‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் 2025’ முன்முயற்சியானது, இரத்த குளுக்கோஸ் பரிசோதனைகள், பாதப் பரிசோதனைகள், தைராய்டு பரிசோதனை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான நீரிழிவு விழித்திரை பரிசோதனை, பல் பரிசோதனைகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனை உள்ளிட்ட இலவச சுகாதார பரிசோதனை சேவைகள் இடம்பெற்றன. இச்சேவைகள், எளிதில் அணுகக்கூடிய சமூக பங்களிப்பின் மூலம் நீரிழிவு முன்தடுப்பு மற்றும் முழுமையான மேலாண்மையை ஊக்குவிப்பதில் காவேரி மருத்துவமனை கொண்டுள்ள அர்ப்பணிப்பை சுட்டிக் காட்டுகின்றன.

காவேரி மருத்துவமனைக் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், ” நீரிழிவு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் எங்களின் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சமூகத் திட்டங்களில் டிஷ்யூம் டிஷ்யூம் டயாபடீஸ் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும், பொதுமக்களின் உற்சாகமான பங்கேற்பு எங்களை ஊக்குவிக்கிறது. இது நகரங்களில் மிகவும் பாராட்டப்பட்ட சுகாதார விழிப்புணர்வு நிகழ்வுகளில் ஒன்றாக திகழ்கிறது. இம்முயற்சியின் ஒரு பகுதியாக காவேரி வளர்சிதை மாற்ற நலவாழ்வு மையத்தை துவக்கியிருப்பது, முன்தடுப்பு மற்றும் முழுமையான பராமரிப்புக்கான எங்களின் தொலைநோக்குப் பார்வையை மேலும் வலுப்படுத்துகிறது.” என்று கூறினார்.

இப்புதிய முன்முயற்சியின் மூலம், முன்தடுப்பு மற்றும் முழுமையான சுகாதாரப் பாதுகாப்பிற்கான தனது உறுதிமொழியை காவேரி மருத்துவமனை மேலும் வலுப்படுத்துகிறது. அத்துடன், ஆரோக்கியமான வளர்சிதை மாற்றமே ஒட்டுமொத்த நலவாழ்வுக்கு அடிப்படையானது என்பதை தனிநபர்கள் உணர்ந்துகொள்ள இதுவொரு வலுவான சான்றாகும்.

மேலும் தகவலுக்கு, தொடர்பு கொள்ளவும்:
காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை, சென்னை
8880288802