நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர் அறிமுகப்படுத்திய ‘SherifMoves.com’ – பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவச நடனக் கல்வி வழங்கும் புதிய தளம்
சென்னை, 16 நவம்பர் 2025:
Sherif Dance Company (SDC) நிறுவனர் மற்றும் பிரபல நடன இயக்குனர் ஷெரிப் மாஸ்டர், திறமை மற்றும் ஆர்வம் கொண்ட பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட இலவச நடன பயிற்சி தளம் ‘SherifMoves.com’–ஐ நேற்று அறிமுகப்படுத்தினார்.
தமிழ் திரைப்படத் துறையிலும், பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும், மேலும் தமிழகத்தின் பல பகுதிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு பயிற்சி வழங்கியும் பெயர் பெற்றவர் ஷெரிப் மாஸ்டர். கடந்த இருபது ஆண்டுகளாக இளம் நடன திறமைகளை கண்டுபிடித்து, வழிகாட்டி, மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகிறார். பொருளாதார காரணங்களால் பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட நடனக் கல்வி வழங்கும் நோக்கத்துடன் இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சியின் மூலம், குழந்தைகளுக்கு வருடந்தோறும் இலவச நடனப் பயிற்சி வழங்கப்படும். எதிர்கால நடனக் கலைஞர்கள், நடன இயக்குநர்கள் திறமைகளை உருவாக்கும் நோக்கத்துடன், தொழில்முறை வழிகாட்டல் துறையைச் சார்ந்த அனுபவங்களை வழங்குவது இந்த தளத்தின் குறிக்கோள்.
இத்தளத்தை நேற்று அகரம் ஜெயஸ்ரீ அவர்கள் அறிமுகப்படுத்தினார். பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்கள் கல்வியை ஆதரிக்கிறது மற்றும் பல கல்வி முயற்சிகளில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அவர், இத்திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கினார். இதுகுறித்து தமிழ் திரைப்படத் துறையின் பலரும் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்:
நடிகர் ரவி மோகன்
பாடகி கினீஷா
இயக்குநர் பொன்ராம்
இயக்குநர் கார்த்திக் யோகி
நடிகர் கருணாகரன்
இந்த அறிமுகம் SDC ஆண்டு விழா 2025 நிகழ்வின்போது நடைபெற்றது. “Dance with Purpose” என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு மாணவர்கள் சமூக பொறுப்பு, விழிப்புணர்வு, மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட நடன நிகழ்ச்சிகளை ஆற்றினர்.
நிகழ்ச்சியில் மாணவர்களின் தீம் அடிப்படையிலான நடனங்கள், SherifMoves.com தள அறிமுகம், விருந்தினர்கள் மற்றும் ஊடகங்களுடன் கலந்துரையாடல் ஆகியவை இடம்பெற்றன.
SDC மாணவர்கள் நடத்திய தீம் அடிப்படையிலான நிகழ்ச்சிகள்:
1. POLLUTION
2. BEAUTY
3. GOOD TOUCH BAD TOUCH
4. போலீஸ் – நம்மை காக்கும் காவலர்