*ஐசிசி மகளிர் உலகக் கோப்பை வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா! *

24

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியை வழி நடத்தி சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு சென்னையில் 38 வருடங்களாக கல்விச்சேவையில் புகழ்பெற்று விளங்கும் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இந்தியா மற்றும் இலங்கையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இந்த தொடரின் இறுதிப் போட்டிக்கு ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், லாரா வோல்வார்ட் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியும் முன்னேறி இருந்தன.

நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க மகளிர் அணியை வீழ்த்தி அசத்தியது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடர் வரலாற்றில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைத்தது. இதனையடுத்து இந்திய மகளிர் அணி வீராங்கனைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்தன.

மகளிர் உலகக் கோப்பையின் வெற்றியைத் தொடர்ந்து, இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் சென்னையில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைகழகம் வளாகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அவருக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன், தலைவர் மேரி ஜான்சன் ஆகியோர் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் ஹர்ம்பிரீத் கவூருக்கு சால்வையும், மாலையையும் அணிவித்து, நினைவு பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து பெருமிதம் கொண்டனர். உடன் பல்கலைக்கழக துணை தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அதை தொடர்ந்து சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு கிரிக்கெட் பேட் மற்றும் இந்தியன் மகளிர் அணியின் ஜெர்சியில் அவரது கையெழுத்துயிட்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் மரியஜீனா ஜான்சன், தலைவர் மேரி ஜான்சன் ஆகியோரிடம் இந்திய மகளிர் அணியின் கேப்டன் வழங்கினார்.

முன்னதாக உலகம் தரம் வாழ்ந்த எம்.ஜெ. உள் விளையாட்டு அரங்கத்தை இந்திய கிரிக்கெட் மகளிர் அணியின் கேப்டன் ஹர்ம்பிரீத் கவூர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதை தொடர்ந்து சென்னையில் உள்ள தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்கள் யாரை உங்களுக்கு தெரியும் என்று தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு :- நாங்கள் உலக கோப்பை வென்ற பிறகு நான் தாய்லாந்ததில் இருந்த போது நடிகர் ரஜினிகாந்த் செல்போனில் என்னை தொடர்பு கொண்டு சிறிது நேரம் பேசினார். வெற்றிபெற்று சாதனை படைத்ததற்கு பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நான் சென்னை வந்த நிலையில் ரஜினிகாந்த் அவரது குடும்பத்துடன் இந்த மேடையில் இருந்து இருப்பார் அவரை சந்திக்கலாம் என்று நினைத்தேன்.

ஆனால் அவர் சினிமா படப்பிடிப்பிற்காக சிங்கப்பூர் சென்றுள்ளார் என்று தெரிந்தது.

இந்திய கிரிக்கெட் மகளிர் அணி உலக கோப்பை வெற்றி பெற்ற பின்பு அரசு சார்பில் நாட்டின் பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் பாராட்டிய நிலையில் சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.