வேளம்மாள் நெக்சஸ் விளையாட்டு சாதனையாளர்கள் உலக அதிவேக வீரர் யூசைன் போல்ட் அவர்களுடன் மறக்க முடியாத தருணம் பகிர்ந்தனர்
வேலம்மாள் நெக்சஸ் மாணவர்கள் மற்றும் விளையாட்டு சாதனையாளர்கள், உலக அதிவேக ஓட்டப்பந்தய வீரர் யூசைன் போல்ட் அவர்களை சந்திக்கும் அபூர்வ வாய்ப்பைப் பெற்றனர்.
இந்த சிறப்பு நிகழ்வில் யூசைன் போல்ட் அவர்கள் மாணவர்களுடன் கலந்துரையாடி, ஒழுக்கம், முயற்சி, மற்றும் தனது கனவுகளில் நம்பிக்கை வைப்பது போன்ற வெற்றிக்கான முக்கியக் கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.
நிகழ்வின் சிறப்பாக, யூசைன் போல்ட் அவர்கள் மாணவர்களுடன் சேர்ந்து பிரபலமான தமிழ் பாடலுக்கு நடனமாடி அனைவரையும் உற்சாகமூட்டினார்.
இந்த சந்திப்பு, வேலம்மாள் நெக்சஸ் மாணவர்களுக்கு பெரும் ஊக்கமாக அமைந்து, தங்கள் கனவுகளை சாதிக்க உறுதியுடன் முன்னேற உத்வேகமளித்தது.