லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) – சாதனை

27

சென்னையில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) இதுவரை 100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனைப் படைத்துள்ளது, ஏழு வருடங்களாக தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாவில் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், பிளாக் பட இயக்குநர் பாலசுப்பிரமணி, பாம் திரைப்பட இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் யாத்திசை திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் நடிகர் வினோத் கிஷன் மற்றும் நடிகர்-இயக்குநர் ஆனந்த் ராம் ஆகியோர் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகளை கொடுத்து வாழ்த்துகளை வழங்கினார்.

இதுவரை பல புதிய இயக்குநர்களை LIGHTZ ÖN AWARDS உருவாக்கியுள்ளது. சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமை உள்ள இளைஞர்கள் சினிமாவிற்குள் வர காரணமாக LIGHTZ ÖN இருக்கிறது.

புதிதாக இரண்டு பெண் குறும்பட இயக்குநர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தை சேர்ந்த ‘முரண்’ என்கிற குறும்படமும் சிறப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LIGHTZ ÖN YOUTUBE CHANNEL குறும்பட இயக்குநர்களுக்கான முதல் சேனலாக திகழ்வது பெருமைக்குரியது.