மிகவும் செழிப்பாக உள்ள திம்மா ரெட்டிபள்ளி கிராமத்தில் திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனினும் அவ்வூரில் உள்ள ஒரு சமூக சேவகர் அம்மக்களுக்கு நம்பிக்கையூட்டினார். அதைக் கண்டு பொறாமை அடைந்த அங்குள்ள ஆறு பண்ணையார்கள் கிராமத்தில் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்தினரின் கால்நடைகளையும், விவசாயத்தையும், வீடுகளையும் சேதம் செய்து இளம் பெண்களையும் நாசம் செய்கின்றனர். இத்தகைய தீய செயல்களை செய்வது இவர்கள் தான் என்று தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
அக்கிராமத்தில் சுனிதா என்னும் ஒரு இளம் பெண் கனகவள்ளி என்னும் தேவதையாக விஸ்வரூபம் எடுத்து அக்கயவர்களை அழித்து துயரத்திலிருந்து ஊர் மக்களை எவ்வாறு காப்பாற்றுகிறாள் என்று உணர்வுபூர்வமாக சொல்லப்படுகிறது என்கிறார்
இயக்குனர்
ஜெயராவ் சேவூரி
“கனகவள்ளி” என்னும் இந்த மேடை நாடகம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற பின் திரைப்படமாக உருவாகி உள்ளது
கூத்து பட்டறையில் நடிகர்கள் பசுபதி,கலைராணி ஆகியோரோடு இவரும் ஒன்றாக நடிப்பு பயிற்சி பெற்றவர்.
நடிகர்கள் ஸ்ரீகாந்த், அதர்வா,ஆதி,முனீஸ் காந்த்,வினோத் சாகர் போன்றோர் இவரின் தியேட்டர் லேப் நடிப்பு பயிற்சி மையத்தில் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தவிர கடல்,அவள் பெயர் தமிழரசி,மெட்ராஸ்,
ஜெய்பீம் போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார்
ஜெயராவ் சேவூரி
ருவா புரொமோட்டர்ஸ் சார்பில் விக்னேஷ், வேலுமணி தயாரிப்பில் ஜெயராவ் சேவூரி இயக்கியுள்ள இப்படத்தில் சுவேட்சா சக்கரவர்த்தி கதாநாயகியாக கனகவள்ளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்
ஹைதராபாதைச் சேர்ந்த படத்தின் கதாநாயகி சுவேட்சா சக்கரவர்த்தி
முறையாக பரதநாட்டியம், சண்டைப் பயிற்சி, இசை,கற்றுத் தேர்ந்து உள்ளார்.24 வயது மட்டுமே உள்ள இந்த இளம் பெண் படத்தின் வலிமையான கதாபாத்திரத்தை தத்ரூபமாக உணர்ந்து, அந்தக் கதை பாத்திரமாகவே வாழ்ந்தார் என்று பெருமிதம் கொள்கிறார் இயக்குனர்
ஜெயராவ் சேவூரி
கதாநாயகி
சுவேட்சா சக்கரவர்த்தியுடன் அருணாச்சலம்,
விமல் ராஜ்,
ஜேஎஸ் நாராயணா, கிருஷ்ணவேணி, ஸ்ரீதரன் ,ராக்கேஷ், ஸ்ரீஹரி,யுவன் சங்கர், ராஜ்குமார்,நித்தின், ஜெய் பிரகாஷ்,மாறன், பல்லவி,சௌந்தர்யா, விஷால் ராஜ்,சவுரவ், ஜெகதீஷ்,சீனிவாசன் போன்ற நட்சத்திரங்கள் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.
ஒளிப்பதிவு -பிரதீப்
எடிட்டிங்-பி.லெனின்
மக்கள் தொடர்பு -வெங்கட்
தயாரிப்பு-
விக்னேஷ்,வேலுமணி
கதை திரைக்கதை வசனம் பாடல்கள் இசை இயக்கம் –
ஜெயராவ் சேவூரி.