இன்று தலைப்பு வெளியீடு நடைபெற்றுள்ள பான் இந்திய திரைப்படம் ‘சமரி – தி லெஜெண்ட் ஆஃப் வாராஹி’, வாராஹி அம்மனின் வரலாறு மற்றும் பெருமைகளை உலகம் முழுவதும் பரவச் செய்யும் நோக்கில் உருவாகிறது.

449

இந்த பிரம்மாண்ட படைப்பை குளோபல் பிக்சர்ஸ் சார்பில் அழகர்ராஜ் ஜெயபாலன் தயாரிக்கிறார். ‘எக்கோ’ மற்றும் ‘பல்ஸ்’ படங்களின் இயக்குநர் நவின் கணேஷ் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

பெரும் நட்சத்திர பட்டாளமும், முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளனர். இவர்களின் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்த பான் இந்திய திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.