இஸ்பானி சென்டர் 3வது முறையாக வெற்றிகரமாக நடத்திய குவிஸ்பைட்ஸ் 3.0 சமையற்கலை வல்லுனர்களுக்கான (செஃப்) சிறப்பான போட்டி

16

சென்னை: 5 மார்ச் 2025: இஸ்பானி சென்டர் ஏற்பாடு செய்து சென்னையின் ஜிஆர்டி கிராண்டு வளாகத்தில் நடைபெற்ற க்விஸ்பைட்ஸ் 3.0 (QuizBites 3.0), மிகச்சிறப்பான வெற்றி நிகழ்வாக இருந்தது. தென்னிந்தியா முழுவதிலுமிருந்து இப்போட்டியில் பங்கேற்க வந்திருந்த 100-க்கும் அதிகமான சமையல் வல்லுனர்களின் (செஃப்) சமையற்கலை அறிவையும், திறனையும் காட்சிப்படுத்தும் நல்ல வாய்ப்பாக இது அமைந்தது. சமையற்கலை மீது நடத்தப்பட்ட இந்த கௌரவம் மிக்க க்விஸ் போட்டியில் பழுத்த அனுபவம் வாய்ந்த நிபுணர்களும் மற்றும் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களும் உற்சாகத்தோடு போட்டியில் பங்கேற்றனர். தென்னிந்தியாவின் சமையல் கலை சமூகத்தில் இந்த வல்லுனர்கள் கொண்டிருக்கும் திறனின் ஆழத்தையும், பேரார்வத்தின் அளவையும் சுட்டிக்காட்டுவதாகவும் பரபரப்பையும், ஆர்வத்தையும் அதிகரிப்பதாகவும் இப்போட்டி இருந்தது.

இந்த ஆண்டு நிகழ்வானது, திருத்தியமைக்கப்பட்ட வடிவத்தில் நடத்தப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட பல பஸ்ஸர் சுற்றுகள் மற்றும் அதிவேக கேள்வி பதில் அமர்வுகள் ஆகியவை இடம்பெற்றிருந்தது, ஒவ்வொரு பங்கேற்பாளரும் அவரது திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை பெறுவதை உறுதி செய்திருந்தது. இச்சுற்றுகள் சமையல் குறித்த விரிவான அறிவை பரிசோதிப்பதாக இருந்ததோடு, கணநொடியில் வேகமாக சிந்திக்கின்ற திறனையும் மற்றும் குழுவாக இணைந்து செயல்படும் ஆற்றலையும் பரிசோதனைக்கு உட்படுத்தின. இதன் காரணமாக போட்டியில் பங்கேற்றவர்களும் மற்றும் இந்நிகழ்வைக் காண அதிக எண்ணிக்கையில் கூடியிருந்த பார்வையாளர்களிடமும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற பல சுற்றுக்களுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்கு முதன்மையான மதிப்பெண்களைப் பெற்ற ஆறு குழுக்கள் மட்டும் முன்னேறின. இதில் மிகச்சிறந்த சமையற்கலைஞர்கள் மட்டுமே வெற்றிகாண முடியும் என்ற அளவிற்கு போட்டி தீவிரமாக இருந்தது.

தென்னிந்திய சமையற்கலை சங்கத்தின் (SICA) தலைவர் – செஃப் தாமோதரன் மற்றும் அதன் பொதுச் செயலர் செஃப் சீதாராம் பிரசாத் ஆகிய இருவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். க்விஸ்பைட்ஸ் 3.0 – ஐ மாபெரும் வெற்றி நிகழ்வாக ஆக்குவதில் இவர்கள் இருவரும் ஆற்றிய பங்கு மிகப்பெரியது. இந்த இரு பிரபல செஃப்களின் தலைமைத்துவ பண்புகள், இந்த பரபரப்பான, ஆர்வமூட்டும் க்விஸ் போட்டி எவ்வித தடங்கலுமின்றி மிகச்சிறப்பாக நடப்பதை உறுதி செய்தது. சமையல் வல்லுனர்கள் மத்தியில் தொடர்பினையும், பிணைப்பையும் ஏற்படுத்திக் கொள்வதும் ஒரு சிறந்த வாய்ப்பினை இந்நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதில் சிறப்பான வெற்றி கண்டது.

இந்த க்விஸ் போட்டி, மிக நேர்த்தியாக நடைபெறுவதை உறுதி செய்வதில் இஸ்பானி சென்டர் சிறப்பான பங்காற்றியது. இப்போட்டி நடத்தப்பட்ட அமைவிடத்தின் வசதிகளும் மற்றும் ஜிஆர்டி கிராண்டு – ன் எழில்மிகு சூழலும் ஒருங்கிணைந்து, போட்டிக்கு மிக நேர்த்தியான பின்புலத்தை உருவாக்கியிருந்தன. சமையல் கலை உலகில் சுவையும், நேர்த்தியும் மிக்க நிலையை ஊக்குவிப்பதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இஸ்பானி சென்டர் இந்நிகழ்வை பயன்படுத்தியது. இதன்மூலம் ஒரு துடிப்பான, உற்சாகம் மிக்க சமையல்கலை வல்லுனர்களது சமூகத்தை உருவாக்குவதில் அது வெற்றி கண்டிருக்கிறது.

 

க்விஸ்பைட்ஸ் 3.0 – ன் வெற்றிகர செயலாக்கத்தில் இந்த ஒருமித்த சமூக உணர்வு அழகாக வெளிப்பட்டது.

SICA – ன் தலைவர் செஃப் தாமோதரன் இந்நிகழ்வு குறித்து கூறியதாவது: “க்விஸ்பைட்ஸ் 3.0 என்பது, தென்னிந்தியாவின் சமையற் கலை வல்லுனர்களது சமூகத்திற்குள் இயங்கி வரும் சிறப்பான திறமைகளை பலரும் அறியுமாறு வெளிப்படுத்திய ஒரு நேர்த்தியான நிகழ்வாகும்.

தங்களது படைப்பாக்கத் திறன், அறிவு, திறமைகள் ஆகியவற்றின் வரம்பெல்லைகளை தொடர்ந்து நகர்த்தி விரிவாக்குவதில் சமையற்கலை வல்லுனர்கள் முயற்சித்ததை காண்பது உத்வேகமளிப்பதாக இருக்கிறது. இந்நிகழ்வில் வெளிப்பட்ட பேரார்வம் மற்றும் தோழமை உணர்வின் அளவானது, நமது சமையற்கலையின் எதிர்காலம் குறித்து பெருமிதத்தையும், நம்பிக்கையையும் உயர்த்துவதாக அமைந்தது.”

இஸ்பானி சென்டரின் இயக்குனர் திரு. கேசன் பேசுகையில், “இந்த ஆண்டு ஜிஆர்டி கிராண்டு வளாகத்தில் க்விஸ்பைட்ஸ் 3.0 – ஐ மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தியிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். தென்னிந்தியாவைச் சேர்ந்த செஃப்களில் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தையும் மற்றும் அவர்களின் வியக்கவைக்கும் திறமைகளையும் இந்நிகழ்வு உண்மையிலேயே எடுத்துக்காட்டியது. திறமைகளையும், திறமைசாலிகளையும் வளர்த்தெடுப்பதில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனமாக, தென்னிந்தியாவில் சமையற்கலை வல்லுனர்கள் ஓரிடத்தில் ஒருங்கிணைந்து கூடுவதற்கான ஒரு தளத்தை வழங்கியிருப்பதில் நாங்கள் பெருமிதமடைகிறோம். இனிவரவிருக்கும் ஆண்டுகளிலும் சமையற்கலை வல்லுனர்களது சமூகத்திற்கு ஆதரவளிப்பதை தொடர்ந்து மேற்கொள்வதில் நாங்கள் வெகு ஆர்வத்தோடு இருக்கிறோம்.” என்று கூறினார்.

தென்னிந்தியாவின் சமையற்கலை வல்லுனர்களது சமூகம், திறமை, புத்தாக்கம் மற்றும் படைப்பாக்கத்திறன் ஆகியவற்றில் மிகச் சிறப்பாக செழுமையுடன் இருப்பதை மீண்டும் ஒருமுறை க்விஸ்பைட்ஸ் 3.0 நிகழ்வு நிரூபித்திருக்கிறது. சமையற்கலையை இந்நிகழ்வு மகிழ்ச்சியோடு கொண்டாடியிருப்பதோடு, செஃப்கள் மத்தியில் ஒத்துழைப்பு, பிணைப்பை உருவாக்கல் மற்றும் அறிவுப்பகிர்வு ஆகியவற்றையும் வலுவாக ஊக்குவித்திருக்கிறது. இஸ்பானி சென்டர், SICA மற்றும் அஞ்சலி ஆயில்ஸ் ஆகியோரின் தொடர்ச்சியான ஒருமித்த ஆதரவோடு நடத்தப்படும் க்விஸ்பைட்ஸ், தென்னிந்தியாவில் சமையற்கலையில் நேர்த்தி நிலையை ஊக்குவிப்பதற்கு முதன்மை தளமாக தொடர்ந்து இருந்து வருகிறது.