இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது?

இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்க பட உள்ள நிலையில், இந்திய பிரதமர் மோடி தொடர்ந்து நாடு முழுவதும் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு‌வருகிறார்.
மேலும் பல் வேறு மாநிலங்களுக்கு சென்று ,கோடிக்காண ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் ஆட்சி நடத்தி வரும் மோடி, மீண்டும் வாரணாசி தொகுதியில் போட்டியிடுவார் பாஜக தலைமை அறிவித்துள்ளது. அதற்கு மோடி‌அவர்களும் கட்சி தலைமை‌நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்,கடந்த 2014ல் மார்ச் மாதம் 5ம் தேதி அன்று மக்களவை தேர்தல் அட்டவணை வெளியிடபட்டது.
2019ல் மார்ச் 10ல்தான் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது.
தற்போது இந்திய பிரதமர் மோடி வரும் மார்ச் 13ம் தேதி சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார்
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதில் தீவிரமாக இருக்கிறார். ஒரே மாநிலத்துக்கு பல முறை செல்கிறார். பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டும் திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படுமா? அல்லது மக்களின் வாக்குகளை ஈர்க்க அரசியல் சந்தர்ப்பதிற்காக ,நடைமுறைக்காக நடத்தப்படும் விழாக்களா? என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதில் கிடைக்காத நிலையில் அடுத்த 10 நாட்களுக்கு , வரும் 13ம் தேதி வரை, 12 மாநிலங்களில் அடிக்கல் நாட்டுவதில் பிரதமர் மோடி ஆர்வமாக இருக்கிறார்.
தமிழ்நாடு, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பீகார், காஷ்மீர், அசாம், அருணாச்சல், உ.பி, குஜராத், ராஜஸ்தான், டெல்லி என்று மோடி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
வரும் 13ம் தேதி வரை பிரதமர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதால்,மக்களவை தேர்தல் அட்டவணை அறிவிப்பு தாமதமாகலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தேர்தல் அறிவிப்பதற்கான தேதி 13ம்‌ தேதிக்கு பிறகு இருக்குமென எதிர்பார்க்க படுகிறது.

Subashchandrabose Rajavelan
Editor -Value Media Middle East -UAE

Comments (0)
Add Comment