சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் , கமலஹாசன்,விஜய் அஜித்,சிம்பு,தனுஷ் என பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள் ஈவிபி பிலிம் சிட்டியில் எடுத்திருந்தாலும் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி எடுக்கப்பட்ட பின்பு தான் ஈவிபி ஃபிலிம் சிட்டி பிரபலமடைந்தது. இந்த ஈவிபி பிலிம் சிட்டியின் உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி மீது அண்மையில் பெங்களூர் அருகே வயாலி காவல் நிலையத்தில் பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதில் இன்ஸ்டா பிரபலமும், ஆடை வடிவமைப்பாளரான பார்வதி/42 ஆகிய என்னை ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளர்
சந்தோஷ் ரெட்டி காதலிப்பதாக கூறி தொல்லை தந்ததாகவும் காதலிக்க மறுத்தால் தன்னையும் எனது பிள்ளைகளையும் கொன்று விடுவதாக கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த புகாரில் தெரிவித்து இருந்தார். இந்த புகாரை அடுத்து பெங்களூர் வயாலி காவல்துறையினர் சந்தோஷ் ரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சந்தோஷ் ரெட்டி மீது பெங்களூர் வயாலி காவல் நிலையத்தில் பார்வதி புகார் அளிப்பதற்கு முன்பே பூந்தமல்லி அருகே நசரத்பேட்டை காவல் நிலையம் மற்றும் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவிலும் சந்தோஷ் ரெட்டி பார்வதி மீது மோசடி புகார் அளித்திருக்கும் ஆதாரங்களை ஈவிபி பிலிம் சிட்டி உரிமையாளர் சந்தோஷ் ரெட்டி வெளியிட்டுள்ளார்.அதேபோல் சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் குறித்து நேரில் ஆஜரான சந்தோஷ் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அதில் நிகழ்ச்சி ஒன்றில் அறிமுகமான பார்வதி தன்னை இன்ஸ்டால் பிரபலம் என்றும் ஆடை வடிவமைப்பாளர் என்றும் அறிமுகம் செய்து கொண்டு சந்தோஷ் ரெட்டியிடம் நட்பாக பழகி வந்தாகவும் . நாளடைவில் சந்தோஷ் ரெட்டியின் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக ஆடை, வைர நகைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க சந்தோஷ் ரெட்டி பார்வதியை அணுகிய போது விலை குறைவாகவும், புது,புது டிசைனாக வாங்கியும், வடிவமைத்தும் தருவதாக கூறியுள்ளார்.அதற்கு சென்னையை விட பெங்களூருவில் தரமான நகைகளும், பிராண்டட் பொருட்களும் இருப்பதாக கூறியுள்ளார்.இதனை நம்பி சந்தோஷ் ரெட்டி பார்வதியின் கணவர் பார்த்திபன் நடத்தி வரும் பிரைம் எண்டர்பிரைசஸ் என்ற கம்பெனி அக்கவுண்டில் 3 கோடியே 6 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். இதை அடுத்து ஒரு சில தினங்களில் பார்வதி மூன்று கோடி ரூபாய் தங்கள் வங்கி கணக்கில் வந்தால் தங்களுக்கு வரி பிரச்சனை வந்துவிடும் என்று அந்த பணத்தை திருப்பி சந்தோஷ் ரெடியின் அக்கவுண்டிற்கு அனுப்பியுள்ளனர். பொருட்களை வாங்க நீங்களே பெங்களூருக்கு வந்து விடுங்கள் எனக் கூறி சந்தோஷ் ரெட்டியை பார்வதி பெங்களூர் வர வைத்ததாக சொல்லப்படுகிறது. இதற்காக கடந்த ஜூலை மாதம் 12 ஆம் தேதி சந்தோஷ் ரெட்டி பெங்களூரு சென்றுள்ளார். ஹோட்டலில் தங்க இருந்த சந்தோஷ் ரெட்டியை வலுக்கட்டாயமாக பார்வதியின் வீட்டில் தங்க வைத்துள்ளனர். அடுத்த நாள் சந்தோஷ் ரெட்டி பார்வதி அவரது கணவர் பார்த்திபன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பிரபல நகை கடை மற்றும் LUIES VUITTON SHOW ROOM சென்று
,வைரம் பதித்த AUDEMARS PIGUET வாட்ச், விலையுயர்ந்த செருப்பு, பேக் என பல லட்சத்திற்கு பொருட்களை வாங்கியுள்ளனர்.
ஒவ்வொரு பொருட்களை வாங்கும் போதும் பார்வதி சொன்ன அக்கவுண்டிற்கு பணங்களை சந்தோஷ ரெட்டி அனுப்பி வைத்துள்ளார். 1.5 கோடிக்கு மேல் பொருட்கள் வாங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பின்னர் ஒரு சில பொருட்கள் மட்டுமே கையில் கொடுக்கப்பட்ட நிலையில் மற்ற பொருட்கள் ஆர்டரின் பெயரில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறி சந்தோஷ ரெட்டியை சென்னைக்கு அனுப்பி உள்ளனர். 20 நாட்கள் கழித்து பொருட்கள் இன்னும் வரவில்லையே என சந்தோஷ் ரெட்டி பார்வதியை கேட்க அவரது செல்போன் என்னை அழைத்துள்ளார். ஆனால் பார்வதி செல்போன் அழைப்பை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. பின்னர் செல்போனில் whatsapp கால் மூலம் அழைத்தபோது அதற்கு பதில் அளித்த பார்வதி தன்னிடமா காசு கொடுத்தீர்கள் காசு எங்கு கொடுத்தீர்களோ அங்கு வாங்கிக் கொள்ளுங்கள் என அலட்சியமாக கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் ரெட்டி தன்னை மோசடி செய்தால் காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார்.இதை அடுத்து பார்வதி செல்போன் இணைப்பை துண்டித்துள்ளார்
இந்த நிலையில் சந்தோஷ் ரெட்டி செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி நசரத்பேட்டை காவல் நிலையத்திலும் ஆவடி காவல் ஆணையரக மத்திய குற்றப்பிரிவிலும் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் பார்வதி அவரது நண்பர் நித்திஷ் ஆகிய இருவர் பேர் மீது 316,318,351 ஆகிய 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் மத்திய குற்றப்பிரிவு பிரிவிலும் பார்வதி கணவர் பிரேம் ஆகியோர் மீது அளிக்கப்பட்ட புகாரில் பார்வதியின் வங்கி கணக்கு முடக்கி விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.
அதேபோல் தன் மீது அளித்த புகார் குறித்து பேசிய அவர் பார்வதி என்பவர் கடந்த 14/7/2025 அன்று தன்னை மிரட்டியதாக பெங்களூர் காவல் நிலையத்தில் மீது பொய் வழக்கை பதிவு செய்துள்ளார் ஆனால் அதற்குப் பின்னர் தான் பார்வதி தரப்பினருக்கும் பண பரிமாற்றங்கள் செய்துள்ளோம் அதற்கான ஆதாரங்கள் உள்ளது.
செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி நான் அளித்த புகாரில் காவல் துறையினர் விசாரணை அழைத்தனர்.ஆனால் அந்த விசாரணைக்கு ஆஜராகமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு அளித்தார்.அது டிஸ்மிஸ் ஆனதால் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி தன் மீது வயாலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் பார்வதி என்பவர் சமுதாயத்தில் செல்வாக்கான நபர்களை குறி வைத்து தொடர்ந்து மோசடியில் ஈடுபடுபவர் என்றும் விசாகப்பட்டினத்தில் பிரபல தொழிலதிபர் ஒருவரை கடந்த 2023 ஆம் ஆண்டு ரூபாய் 20 லட்சத்தை தன்னை ஏமாற்றியது போலவே நூதன முறையில் ஏமாற்றியதாக பார்வதி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், கர்நாடகாவை சேர்ந்த பிரபல ஜவுளி தொழில் அதிபர் ஒருவரை ஏமாற்றி அங்கும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்