நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரமிற்கு ஐக்கிய அரபு நாடு கோல்டன் விசா வழங்கியது

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது

கோல்டன் விசா வைத்து இருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்

கடந்த 2019-ம் ஆண்டு முதல் இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா பெற்றவர்கள் அந்நாட்டு பிரஜை போல வாழ்வதுடன், அங்கேயே தங்கி படிக்கலாம். அங்கேயே பணியும் புரியலாம். அத்துடன் வியாபாரங்களிலும் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று ஐக்கிய அரபு நாடு தெரிவித்துள்ளது

இந்த நிலையில் நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமாக இருக்கக்கூடிய துருவ் விக்ரமிற்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்திருக்கிறது ஐக்கிய அரபு நாடு

துபாய் சென்ற நடிகர் துருவ் விக்ரம் ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் புகழ்பெற்ற வணிக அமைப்பு நிறுவனமான ஜேபிஎஸ் நிறுவனத்தின் இயக்குனர் மருத்துவர் ஷாநீத் ஆசிப் அலி வரவேற்பு அளித்து நடிகர் துருவ் விக்ரமுக்கு யுஏஇ விசாவை வழங்கினர்

ஏற்கனவே நடிகர் கடந்த 2022ஆம் ஆண்டு நடிகர் விக்ரமிற்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசா வழங்கிய நிலையில் தற்போது அவரது மகன் துருவ் விக்ரமுக்கு வழங்கப்பட்டது

முன்னதாக இந்த கோல்டன் விசாவை நடிகர்கள் கமல்ஹாசன், பார்த்திபன், விஜய்சேதுபதி, சிம்பு, நாசர், மோகன்லால், மம்முட்டி, பிருதிவிராஜ், சஞ்சய் தத், ஷாருக்கான், துல்கர் சல்மான், நடிகைகள் திரிஷா, காஜல் அகர்வால், மீனா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிராய், பிரணிதா, மீனா, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..

Comments (0)
Add Comment