திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு, இன்று (16-01-2026, வெள்ளிக்கிழமை), கவிப்பேரரசு #வைரமுத்து, பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
துணைவேந்தர் திருவாசகம், நல்லி குப்புசாமி, V.G. சந்தோஷம், வெற்றி தமிழர் பேரவை V.P. குமார், உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்ற பொதுச் செயலாளர் த. ஞானசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் சிகாகோ அரசர் அருளாளர், மொரிசியஸ் பேரா. ஜீவன் செம்மன், கபிலன் வைரமுத்து உள்ளிட்ட தமிழன்பர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பாடகி சரண்யா ஸ்ரீநிவாஸ் கலந்து கொண்டு திருக்குறள் பாடினார்.
@Vairamuthu @KabilanVai @onlynikil