ஜீவா மற்றும் ஆண்ட்ரியா ஜெரமையா நடித்த சமீபத்திய பொங்கல் பிராண்ட் திரைப்படம் உள்ளிட்ட பல வெற்றிகரமான ஒரிஜினல் சீரிஸ்கள் மற்றும் திரைப்படங்களுக்குப் பிறகு, தமிழ் ZEE5 தனது பிராந்திய ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில் பெரும் பாராட்டுகளைக் குவித்த கிரைம் – நீதிமன்ற டிராமா திரைப்படமான “சிறை” திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது. இப்படத்தை இயக்குநர் தமிழ் கதையை மையமாக வைத்து, அவருடன் இணைந்து திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி. Seven Screen Studio சார்பில் S.S. லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்தில், விக்ரம் பிரபு, L.K. அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் மற்றும் அனந்தா தம்பிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படம் L.K. அக்ஷய் குமாரின் அறிமுகப் படமாகும். மேலும், தமிழ் இயக்குநராக அறிமுகமான அவரது முந்தைய ‘டாணாக்காரன்’ படத்திற்குப் பிறகு, விக்ரம் பிரபு – தமிழ் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ‘சிறை’ திரைப்படம் ஜனவரி 23, 2026 முதல் தமிழ் ZEE5 தளத்தில் பிரீமியர் ஆகிறது.
ஒரு கைதியை கோர்ட்டுக்கு அழைத்துச் செல்லும் பணியின் போது, ஒரு காவல் அதிகாரிக்கு ஏற்படும் சிக்கல்கள், அமைப்பு ரீதியான அழுத்தங்கள், மனிதநேய உணர்வுகள் மற்றும் நெறிமுறை முரண்பாடுகள் ஆகியவற்றின் நடுவே சிக்கிக்கொள்ளும் ஒரு நேர்மையான காவல் அதிகாரியின் பயணமே இப்படத்தின் மையக் கதை. அதில் தீவிரமான நீதிமன்ற நாடகமும் பின்னிப் பிணைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்து விக்ரம் பிரபு கூறியதாவது:
“‘சிறை’ என் நடிப்புப் பயணத்தில் மிகவும் உணர்ச்சிப்பூர்வமான, மனதுக்கு நெருக்கமான திரைப்படங்களில் ஒன்று. என் கதாபாத்திரம் கடமையால் கட்டுப்பட்டவன்; அதே நேரத்தில் அவன் பணியாற்றும் அமைப்பையே கேள்வி கேட்பவன். இந்த படம் தமிழ் ZEE5 வழியாகப் பரந்த ரசிகர்களை அடையப் போவது எனக்கு மிகுந்த உற்சாகம் தருகிறது. எல்லா பிராந்தியங்களிலும் உள்ள பார்வையாளர்கள் இந்தக் கதையை அனுபவிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.”
தன் கதாபாத்திரம் குறித்து L.K. அக்ஷய் குமார் கூறியதாவது:
“இந்த படம் நடிகராக எனக்கு பெரும் சவாலாக இருந்தது. என் கதாபாத்திரம் முழுமையாக நல்லவன் அல்லது கெட்டவன் என வரையறுக்க முடியாதவன். சூழ்நிலைகளும் முடிவுகளும் அவனை உருவாக்குகின்றன. ‘சிறை’ படம் எனக்கு அறிமுகப்படமாக அமைந்தது எனக்குப் பெருமை. இது தமிழ் ZEE5-இல் வெளியாகிறது என்பதில் அளவில்லா மகிழ்ச்சி. வலுவான உள்ளடக்கத்தைக் கொண்ட சினிமாவை மதிக்கும் தளம் அது. இதன் மூலம் அனைவரும் இப்படத்தை ரசிப்பார்கள் என நம்புகிறேன்.”
அழுத்தமான கதை சொல்லல், பரபரப்பான கதாபாத்திரங்கள் மற்றும் சமூக ரீதியான ஆழமான கருத்துகள் ஆகியவற்றுடன், 2026 தொடக்கத்தில் வெளியாகும் ஓடிடி வெளியீடுகளில் முக்கியமான தமிழ்த் திரைப்படங்களில் ஒன்றாக ‘சிறை’ இருக்கும்.
‘சிறை’ திரைப்படம் 23 ஜனவரி 2026 அன்று, தமிழ் ZEE5 தளத்தில் பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது.
ZEE5 பற்றி:
ZEE5 என்பது பாரதத்தின் மிகப்பெரிய முன்னணி வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாகும். ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ZEE5, பல மொழிகளில் கதைகளை சொல்லும் தளமாக விளங்குகிறது. 4,071+ திரைப்படங்கள், 1,800+ டிவி நிகழ்ச்சிகள், 422+ வெப் ஒரிஜினல்ஸ், 4,492+ இசை வீடியோக்கள் மற்றும் 1.35 லட்சம் மணிநேரத்திற்கு மேற்பட்ட ஆன்-டிமாண்ட் உள்ளடக்கங்களை கொண்ட விரிவான நூலகத்தை இது வழங்குகிறது. 12 மொழிகளில் – இந்தி, தமிழ், தெலுங்கு, பெங்காலி, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம், ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி – தனிப்பயன் மற்றும் ஹைப்பர்-லோக்கல் சந்தா திட்டங்களுடன் உள்ளடக்கம் வழங்கப்படுகிறது. உலகளாவிய டெக் கூட்டாளிகளுடன் உருவாக்கப்பட்ட வலுவான டீப்-டெக் கட்டமைப்பு, பல சாதனங்கள் மற்றும் இயக்க முறைமைகளில் தடையற்ற பார்வை அனுபவத்தை ZEE5 வழங்க உதவுகிறது.
Facebook, Instagram, LinkedIn மற்றும் X-ல் ZEE5-ஐ பின்தொடருங்கள்.