‘லூசிபர் 2 எம்புரான்’ படத்தின் நட்சத்திர இயக்குநருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த லைக்கா சுபாஸ்கரன்

134

லைக்கா சுபாஸ்கரன் முதன்முதலாக மலையாள மொழியில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் ‘லூசிபர் 2 எம்புரான்’ படத்தின் இயக்குநரான பிருத்விராஜ் சுகுமாறனுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த அவரை போன் மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியாவின் பிரம்மாண்டமான பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் மலையாள திரையுலகில் பாரம்பரியமிக்க பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து, நடிகரும், இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் மலையாள திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான மோகன்லால் நடிப்பில் ‘லூசிபர் 2 எம்புரான்’ எனும் படத்தை தயாரித்து வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் இன்று பிறந்தநாள் கொண்டாடுவதால் ‘லூசிபர் 2 எம்புரான்’ படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்த அவரை வெளிநாட்டில் இருக்கும் லைக்கா நிறுவனத்தின் உரிமையாளரான சுபாஸ்கரன் கைபேசி மூலம் தொடர்பு கொண்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை அன்புடன் பகிர்ந்து கொண்டார். இதனால் உற்சாகமடைந்த இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாறன், படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரனுக்கு நன்றி தெரிவித்தார்.‌

லைக்கா புரொடக்ஷன்ஸ் – ஆசீர்வாத் சினிமாஸ் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கும் ‘லூசிபர் 2 எம்புரான்’ படத்தில் மோகன்லாலுடன் இந்திய திரையுகைச் சார்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்கள், நடிகைகள் நடிக்கிறார்கள். இப்படத்தின் திரைக்கதையை முரளி கோபி எழுத, சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைக்கிறார்.
சுரேஷ் பாலாஜி மற்றும் ஜார்ஜ் ஃபயஸ் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றுகிறார்கள். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் தயாராகிறது.