கேன்ஸ் திரைப்பட விழாவில் ’செங்கோடி’ படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

68

தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்தால் தேர்வு செய்யப்பட்ட குறும்படம் செங்கொடி. இக் குறும்படத்தை பாக்கியராஜ் பரசுராமன் என்பவர் இயக்கினார். கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு அனுப்பப்பட்ட இந்த குறும்படம் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்த குழு விரைவில் வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று இந்த குழு கூறுகின்றனர்.