ஷாருக்கானின் ஜவான் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பாகவே, தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது!

108

இணையம் எங்கும் “ஜவான்” திரைப்படம் பற்றிய பேச்சு தான் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஷாருக்கானைத் திரையில் காணும் ரசிகர்களின் ஆவல் என்றுமே குறைவதில்லை. இந்த உணர்வுதான் அவரது படங்களுக்கான வியாபாரத்தை எப்போதும் உயர்த்திக் கொண்டே வருகிறது. அவரது ஜவான் படமும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் டிரெய்லரே வெளியாகாத நிலையில், இப்படத்தின் தியேட்டர் வெளியீடு அல்லாத உரிமம் 250 கோடிக்கு விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானின் அதிரடி நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டிரெய்லர் மேலும் பல சாதனைகள் படைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

SRK படங்களுக்கான உரிமைகள் எப்போதும் பிரீமியமான விலையில் தான் விற்கப்படுகின்றன, அவரது திரைவரலாற்றில் ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் சாதனையைத் தகர்த்து வருகிறது. அவரது வரவிருக்கும் இரண்டு படங்களின் வியாபாரத்தில் சொல்லப்படும் எண்கள் திரை உலகைத் திகைக்க வைக்கும் எண்ணிக்கையில் உள்ளது.

SRK இன் அடுத்த வெளியீட்டைச் சுற்றி ரசிகர்களிடம் நிலவும் எதிர்பார்ப்பு தொழில்துறையை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. விநியோகஸ்தர்கள் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்கள் படத்தின் உரிமைகளைப் பெறப் போட்டிப் போட்டு வருகின்றன. இந்த ஒப்பந்தங்களுடன் தொடர்புடைய எண்கள் சமீப காலங்களில் எந்த ஒரு திரைப்படத்தையும் விஞ்சியதாக, பெரும் எண்ணிக்கையில் வியக்க வைக்கிறது, தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ராஜாவாக வலம் வரும் SRK இன் புகழ் அசைக்க முடியாததாக உள்ளது.

ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தை அட்லீ குமார் இயக்கியுள்ளார். இதை ஷாருக்கின் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் கௌரி கான் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த அற்புதமான படைப்பின் அடுத்த கட்ட அப்டேட்டுக்கு சிறிது காலம் காத்திருங்கள்.