’இன்ஃபினிட்டி’ விமர்சனம்

135

நடிகர்கள் : நட்டி நடராஜன், வித்யா பிரதீப், முனீஷ்காந்த், தா.முருகானந்தம், வினோத் சாகர், சார்லஸ் வினோத், நிகிதா, ஜீவா ரவி, சிந்துஜா, ஆதவன்
இசை : பாலசுப்பிரமணியன்.ஜி
ஒளிப்பதிவு : சரவணன் ஸ்ரீ
இயக்கம் : சாய் கார்த்திக்
தயாரிப்பு : மென்பனி புரொடக்‌ஷன்ஸ் – வி.மணிகண்டன், யு.பிரபு, கே.அற்புதராஜ், டி.பாலபாஸ்கரன்

சென்னையில் ஒரே நாளில் இரண்டு கொலைகள் நடக்கிறது. அந்த கொலை வழக்கை விசாரிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொலை செய்யப்பட வழக்கு சிபிஐ-க்கு மாறுகிறது. சிபிஐ அதிகாரியான நட்டி நடராஜன் அந்த தொடர் கொலைகளின் பின்னணியை எப்படி கண்டுபிடிக்கிறார்? என்பதே ‘இன்பினிட்டி’ படத்தின் கதை.

‘இன்ஃபினிட்டி’ என்றால் முவில்லாதது என்று அர்த்தம். தலைப்பை போலவே படம் முடியாமல் இரண்டாம் பாகமாக தொடரப்போவதாக இறுதியில் லீட் கொடுக்கிறார்கள். ஆனால், முதல் பாகத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளுடன் இயக்கியிருப்பது பெரும் சோகம்.

நாயகனாக நடித்திருக்கும் நட்டி நடரஜான் தனக்கு கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருந்தாலும், இதுபோல அவர் ஏற்கனவே பல படங்களில் நடித்திருப்பதால் புதிதாக அவர் நடிப்பில் குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை.

நாயகியாக நடித்திருக்கும் வித்யா பிரதீப் குறைந்த காட்சிகளில் வந்தாலும், இரண்டாம் பாதியில் திருப்புமுனை கதாபாத்திரத்தில் மிரட்டியிருக்கிறார்.

பாலசுப்பிரமணியம்.ஜி-யின் இசை படத்திற்கு ஏற்ப பயணித்துள்ளது. சரவணன்.ஸ்ரீ-யின் ஒளிப்பதிவிலும் குறையில்லை

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆதவன், முனீஷ்காந்த், சிந்துஜா, நிகிதா, ஜீவா ரவி, சார்லஸ் வினோத், வினோத் சாகர், தா.முருகானந்தம் என அனைத்து நடிகர்களும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.

க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையை எந்தவித சஸ்பென்ஸும் இல்லாமல் நகர்த்தி செல்லும் இயக்குநர் சாய் கார்த்திக், சிபிஐ அதிகாரி மற்றும் அலுவலகத்தை கையாண்ட விதத்தில் கூட பல தடுமாற்றங்களை சந்தித்திருக்கிறார். ஒரு வழியாக படம் முடிந்துவிட்டது, என்று எழுந்திருக்கும் போது, இரண்டாம் பாகத்திற்கான லீட் கொடுக்கிறார். அதையாவது ஜானருக்கு ஏற்றபடி இயக்குகிறாரா?, என்று பார்ப்போம்.

ரேட்டிங் 2.5/5